டிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைதுசென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

பணிநிரந்தர ஆணைக்காக காத்திருக்கும் 2,500 பேராசிரியர்கள்

சென்னை, செப். 29: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 2,500-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு இதுவரை பணி நிரந்தர ஆணை வழங்கப்படாததால், எந்தவித பலன்களையும் அனுபவிக்க முடியவில்லை என அவர்கள

Updated On :20 செப்டம்பர் 2012, 12:40 am

சென்னை, செப். 29: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரிந்து வரும் 2,500-க்கும் மேற்பட்ட பேராசிரியர்களுக்கு இதுவரை பணி நிரந்தர ஆணை வழங்கப்படாததால், எந்தவித பலன்களையும் அனுபவிக்க முடியவில்லை என அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் (டி.ஆர்.பி.) தேர்வு செய்யப்பட்டு, அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக பணியில் சேர்பவர்களுக்கு ஓராண்டு கால பணி முடிந்தவுடன் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். பின்னர் இரண்டு ஆண்டு கால பணி (புரொபேஷன்) முடிந்தவுடன் பணி நிரந்தரச் சான்று வழங்கப்படும்.

 இந்த பணி நிரந்தரச் சான்று வழங்கப்பட்ட பின்னர்தான், அனைத்து அரசு ஊழியர்களுக்கு உள்ளதுபோல், மருத்துவ விடுப்பு பலன்கள் உள்ளிட்ட பல்வேறு பலன்களை அவர்கள் பெற முடியும்.

 இந்த நிலையில் 2007 முதல் அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக (விரிவுரையாளர்கள்) பணியில் சேர்ந்தவர்களுக்கு இதுவரை பணி நிரந்தரச் சான்று வழங்கப்படவில்லை.

 அதாவது, 2007, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் உதவிப் பேராசிரியர்களாகப் பணியில் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்டவர்கள் இப்போது 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும், அவர்களுக்கு பணி நிரந்தரச் சான்று வழங்கப்படவில்லை. இந்த பணி நிரந்தரச் சான்று உதவிப் பேராசிரியர்களுக்கு வழங்கப்படாதபோதும், ஒரு சில கல்லூரிகள் பலன்களை அவர்களுக்கு அனுமதித்தபோதும், பல கல்லூரிகளில் அலுவலக அதிகாரிகள் விதிகளைச் சுட்டிக்காட்டி பலன்களை அளிக்க மறுக்கின்றனர் என பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

 பணி மேம்பாட்டுத் திட்டம்: மேலும் பணி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், உதவிப் பேராசிரியராக 11 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு "தேர்வுநிலை விரிவுரையாளர்' என்ற தகுதி வழங்கப்பட வேண்டும்.

 இந்த தேர்வுநிலை விரிவுரையாளர் தகுதி பெற்ற 3 ஆண்டுகளுக்குப் பிறகு, "அசோசியேட் பேராசிரியர்' என்ற தகுதி வழங்கப்பட வேண்டும்.

 ஆனால், 31-8-2009 வரை மட்டுமே இந்த பலன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான உதவிப் பேராசிரியர்கள் 11 ஆண்டு பணி அனுபவத்தை முடித்துவிட்டு காத்திருக்கின்றனர்.

 மேலும், ஊதிய முரண்பாடுகளும் நிலவுகின்றன. அதாவது, முந்தைய ஊதியக்குழு பரிந்துரையின் கீழ் ஊதிய மாற்றம் செய்யப்பட்டதிலும், பிஎச்.டி. முடித்தவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கியபோதும், ஊதிய உயர்வு வழங்கியபோதும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. இதுபோன்ற காரணங்களால் மூத்த பேராசிரியர்களைக் காட்டிலும், இளையோர் அதிக ஊதியம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பேராசிரியர்கள் கூறுகின்றனர்.

 இந்த முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் பேராசிரியர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத் தலைவர் தமிழ்மணி கூறியதாவது:

 பேராசிரியர்களுக்கு வழங்கவேண்டிய பலன்களை வழங்க வலியுறுத்தியும், ஊதிய முரண்பாடுகளைக் களைய வலியுறுத்தியும் அக்டோபர் 12-ம் தேதி சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருச்சி உள்ளிட்ட மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.