சீமானுக்கு பாராட்டு விழா நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை, மார்ச் 21: சீமானுக்கு ஏப்ரல் 2-ம் தேதி பாராட்டு விழா நடத்தவும், அந்த விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  நாம் தமிழர் கட்சியின் திருவள்ளூர் மாவட்டப
சீமானுக்கு பாராட்டு விழா நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை, மார்ச் 21: சீமானுக்கு ஏப்ரல் 2-ம் தேதி பாராட்டு விழா நடத்தவும், அந்த விழாவுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 நாம் தமிழர் கட்சியின் திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர் செü.சுந்தரமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

 அதில் அவர் கூறியிருந்ததாவது: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சீமான் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார். அதைக் கொண்டாடும் வகையில், தமிழ் முழக்கத்தின் சாகுல் ஹமீது, திரைப்பட இயக்குநர் புகழேந்தி உள்ளிட்டோரின் பங்கேற்புடன் சீமானுக்கு 13.12.11-ல் பாராட்டு விழா நடத்த அனுமதி கோரி அம்பத்தூர் உதவி ஆணையரிடம் 9.12.10-ல் மனு அளிக்கப்பட்டது.

 அந்த விழாவுக்கு அனுமதி தர மறுத்து உதவி ஆணையர் 11.12.10-ல் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

 இந்த மனுவை விசாரித்து நீதிபதி கே.சந்துரு திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு விவரம்:

 சீமான் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்டதை ரத்து செய்து இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 இந்திய உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளில், தடை செய்யப்பட்ட இயக்கத்தில் வெறுமனே உறுப்பினராக இருப்பது அல்லது அதற்கு ஆதரவு தருவது என்பது குற்றமென சொல்ல முடியாது என்று கூறப்பட்டுள்ளன.

 எனவே, அந்தக் கூட்டத்துக்கு போலீஸôர் அனுமதி அளிப்பதுடன், பாதுகாப்பும் தர வேண்டும் என்று நீதிபதி சந்துரு கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com