பொன்னேரி, ஜூன் 13: ரயில் பயணச்சீட்டுகளில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளதால் ஆங்கிலம் தெரியாத பாமர மக்கள் பெரிதும் அவதிப்பட்டு பயணம் செய்யும் நிலை உள்ளது.
÷குண்டும் குழியுமான சாலைகள், அவ்வப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் பஸ்களில் பயணம் செய்வதைத் தவிர்க்கும் வகையில் தமிழகத்தில் வசிக்கும் பெரும்பாலானோர் ரயில் பயணத்தையே விரும்புவர்.
÷ரயில் பயணம் செய்வோரில் 50 சதவீதம் பேர் முன்பதிவு செய்து பயணம் செய்வதாகக் கூறப்படுகிறது. அதே போன்று சென்னை போன்ற புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்வோரில் பெரும்பாலானோர் மாதந்திர சீசன் எடுத்து பயணம் செய்கின்றனர். ÷அவசரமாக ரயில் பயணம் செய்ய விரும்புவர்கள் ரயில் நிலையத்தில் (நீண்ட வரிசையில் நின்று) பயணச்சீட்டு வாங்கி செல்கின்றனர். ஆரம்பத்தில் சிறிய அளவிலான மஞ்சள் அட்டையில் அச்சிடப்பட்ட பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
÷பிறகு மின்னணு பயணச்சீட்டுகள் அறிமுகபடுத்தப்பட்டு, அதில் பயணிகள் புறப்படும் ஊர், சென்று சேரும் ஊர் ஆகியவற்றின் பெயர்கள் அந்தந்ந மாநில மொழி, இந்தி, ஆங்கிலம் ஆகியவை இடம் பெற்றிருந்தது.
÷ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரயில் பயணச்சீட்டுகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டும் ஊர்களின் பெயர்கள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
÷ஆங்கிலம் தெரியாத மக்கள் அவதி... இந்தி மற்றும் ஆங்கிலம் மட்டுமே அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டுகளை வழங்குவதால் தமிழ் மட்டுமே படிக்க தெரிந்த மக்கள் தாங்கள் பயணம் செய்யும் ஊருக்கு சரியான பயணச்சீட்டு வாங்கி செல்கிறோமா? என்பது தெரியாமலேயே பயணம் செய்யும் நிலை உள்ளது.
÷கேரளம், கர்நாடக மாநிலங்களில் வழங்கப்படும் பயணச்சீட்டுகளில் அந்தந்த மாநில மொழிகள் இடம் பெற்றுள்ளதாக ரயில் பயணிகள் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். ÷ஆனால் தமிழகத்தில் மட்டும் தமிழ் எழுத்துகள் இல்லாமல் ஆங்கிலம் மற்றும் இந்தியில் அச்சடிக்கப்பட்ட பயணசீட்டுகளே வழங்கப்படுகின்றன.
÷எனவே தமிழ் மட்டுமே எழுத, படிக்க தெரிந்தவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் அச்சடிக்கப்பட்ட ரயில் பயணச்சீட்டுகளை வழங்க தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே ரயில் பயணத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களின் எதிர்ப்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடி
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


