சென்னை, மார்ச் 15: பொறியியல் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்களுக்கு நடத்தப்படும் கலந்தாய்வு இம்முறையும் சென்னையில் மட்டுமே நடத்தப்பட உள்ளது.
இதற்கான உத்தரவை தமிழக அரசு, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிலான பொறியியல் படிப்புக்கான இடங்களில் மாணவர் சேர்க்கையை நடத்த சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஒற்றைச்சாளர கலந்தாய்வை நடத்தி வருகிறது.
7 ஆண்டுகளுக்கு முன்பு: கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு 2004-05 ஆண்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு ஒற்றைச் சாளர முறையில் அல்லாமல், 4 மையங்களில் நடத்தப்பட்டன.
இதனால் தேவையற்ற தாமதமும், குழப்பங்களும் ஏற்பட்டன. எந்தக் கல்லூரியில் இடம் உள்ளது என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ள, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த தாமதம் மற்றும் குழப்பத்தை போக்குவதற்காக ஒற்றைச் சாளர கலந்தாய்வு முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இந்த நிலையில் 2011-ல் தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற அரசு, பொறியியல் கலந்தாய்வை ஒற்றைச்சாளர முறையில் அல்லாமல், முன்பு இருந்தது போன்று சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட 4 மையங்களில் நடத்தத் திட்டமிட்டது.
இது மாணவர்கள், பெற்றோர்கள் தரப்பில் ஆதரவைப் பெற்றபோதும், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஒற்றைச் சாளர முறைதான் சிறந்தது. பணிகள் குழப்பமின்றி வேகமாக நிறைவடையும் என கருத்துத் தெரிவித்தனர்.
சென்னையில் மட்டுமே... இந்நிலையில் 2011-12 கல்வியாண்டுக்கான கலந்தாய்வு தொடங்குவதற்கு குறைவான நாள்களே இருந்த காரணத்தால், புதிய நடைமுறையை அறிமுகம் செய்வதைத் தவிர்த்துவிட்டு மீண்டும் ஒற்றைச் சாளர முறையில் சென்னையில் மட்டும் நடத்த அனுமதி அளித்தது.
2 லட்சம் விண்ணப்பங்கள்: கலந்தாய்வு குறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் கூறியது:
பொறியியல் கலந்தாய்வு நடத்துவதற்கான அரசாணையை அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, கலந்தாய்வுக்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழகம் தொடங்கிவிட்டது.
கலந்தாய்வுக்கான விண்ணப்பங்களை அச்சடிப்பதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்லூரிகளின் எண்ணிக்கையும், விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்பதால், விண்ணப்பங்களை கடந்த ஆண்டைக்காட்டிலும் கூடுதலாக அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இப்போது 524 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) புதிய கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கும் என்பதால் இந்த எண்ணிக்கை அதிகபட்சம் 550 வரை உயர வாய்ப்பு உள்ளது.
விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் இம்முறை அதிகரிக்கும் என்பதால் கடந்த ஆண்டைக் காட்டிலும் 50 ஆயிரம் விண்ணப்பங்கள் கூடுதலாக அச்சடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, 2 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட உள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

