சென்னை : அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் தொலைதூரம் செல்லும் பஸ்கள் கண்டக்டர்கள் இன்றி, டிரைவர்களை மட்டுமே கொண்டு இயக்கப்படுவதால் விபத்துகள் நேரிடும் அபாயம் உள்ளதாக ஊழியர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
பஸ்ûஸ ஓட்டுவது, பயணிகளுக்கு டிக்கெட் கொடுப்பது ஆகிய இரு பணிகளை டிரைவர்களே செய்வதால் வேலைப்பளு அதிகரித்து விபத்துகளுக்கு வித்திடுகிறது என்று அவர்கள் விளக்கமளித்துள்ளனர்.
போக்குவரத்துக் கழகத்தில் 1400 கண்டக்டர், டிரைவர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. இதனால், ஆள் பற்றாக்குறை காரணமாக அரசு விரைவு பஸ்களில் கண்டக்டர் பணியிடங்கள் நீக்கப்பட்டு வருவதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.
சென்னையிலிருந்து பெங்களூர், கும்பகோணம், தஞ்சை, நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் டிரைவரே கண்டக்டராக பணியாற்றும் நிலை தொடர்கிறது. கன்னியாகுமரியிலிருந்து பெங்களூர், வேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களிலும் இதே நிலைதான் என்கின்றனர் போக்குவரத்துக் கழகத்தினர்.
1994-ம் ஆண்டு ஆணை
முன்னர், சென்னையிலிருந்து நெடுந்தொலைவு பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களில் இரண்டு டிரைவர்கள், ஒரு கண்டக்டர் நியமிக்கப்படுவர்.
ஆனால், இப்போது தொலைதூர பஸ்களில் டிரைவர் ஒருவரும், "டிரைவர் கம் கண்டக்டர்' என்ற பெயரில் மற்றொரு டிரைவரும் நியமிக்கப்படுகின்றனர்.
இவர்கள் இருவரும் மாறி மாறி பஸ்ûஸ ஓட்டிச் செல்வர். "டிரைவர் கம் கண்டக்டர்" ஓய்வாக இருக்கும்போது பயணிகளுக்கு டிக்கெட் கொடுக்கும் பணியையும் கவனித்துக் கொள்வார். இந்தப் புதிய நடைமுறை 1994-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இப்போது குறைந்த தொலைவு பஸ்கள் சிலவற்றில் ஒரே ஒரு "டிரைவர் கம் கண்டக்டர்' நியமிக்கப்படுகின்றனர். இவர் டிரைவர், கண்டக்டர் என இரண்டு பணிகளையும் மேற்கொள்கிறார்.
2 டிரைவர், ஒரு கண்டக்டர் நியமிப்பது எதற்கு?
600 கி.மீ. தொலைவுக்குமேல் இயக்கப்படும் தொலைதூர பஸ்களை ஒரே டிரைவரால் இயக்கிச் செல்ல முடியாது. இரண்டு டிரைவர்கள் தேவை. ஒருவர் பஸ்ûஸ இயக்கும்போது, மற்றொருவர் ஓய்வு எடுக்க வேண்டும். பயணிகளுக்கு டிக்கெட் கொடுப்பது, பஸ் பின்பக்கமாகச் செல்லும்போதும், வளைவுகளில் திரும்பும்போதும் சைகைக் காண்பித்து பாதுகாப்பான பயணத்துக்கு உதவும் பணியை கண்டக்டர் மேற்கொள்வார்.
ஆனால், கண்டக்டர்கள் இன்றி இயக்கும்போது, டிரைவர்களுக்கு ஓய்வு தடைபடுகிறது. உறக்கம் இன்றி பஸ்ûஸ இயக்கும்போதுதான் விபத்து ஏற்படுகிறது என்கின்றனர் விரைவுப் போக்குவரத்துக் கழக சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள்.
புறக்கணிக்கப்படும் வார ஓய்வு
மேலும், ஆள் பற்றாக்குறை காரணமாக, டிரைவர்களுக்கு வார ஓய்வு சரிவர வழங்கப்படுவதில்லை. ஓய்வின்றி தொடர்ச்சியாக பஸ்ûஸ இயக்குமாறு டிரைவர்கள் அறிவுறுத்தப்படுவதாகவும், அவ்வாறு மறுக்கும் டிரைவருக்கு பஸ்ûஸ ஒதுக்கீடு செய்யாமல் வருகைப் பதிவேட்டில் அவருக்கு ஆப்சென்ட் கொடுத்து ஊதியப் பிடித்தம் செய்யப்படுவதாகவும் ஓட்டுநர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
நீதிமன்றத் தீர்ப்பு
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக கன்னியாகுமரி - பெங்களூர் (தடம் எண் 888), கன்னியாகுமரி - வேலூர் (தடம் எண் 283) இயக்கப்படும் பஸ்களில் டிரைவர் பணிக்கும், கண்டக்டர் பணிக்கும் ஒருவரே நியமிக்கப்படுவதற்கு எதிராக போக்குவரத்துக்கழகத் தொழிலாளர் சங்கம் சார்பில் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது என்றும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ்களில் டிரைவர் மற்றும் கண்டக்டர் பணிகளில் ஒருவரையே நியமிப்பதை தடை செய்தும் கடந்த மார்ச் 24-ல் தீர்ப்பளித்தது.
ஆனால், அதன் பிறகும் சில வழித் தடங்களில் இதே நிலை நீடிப்பதாக தொழிற்சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர். 1,400 காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பி, நீதிமன்ற உத்தரவுப்படி பஸ்களில் டிரைவர் மற்றும் கண்டக்டர்களை முழுமையாக பணியமர்த்த வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!

ரூ. 299 மதிப்புள்ள ஆடையை வாங்க முயன்று ரூ. 1 லட்சத்தை இழந்த செவிலியர்!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?

கவிதா தொடங்கிய டிஆர்எஸ் கட்சிக்கு ரேவந்த் ரெட்டி நிதியுதவி: பாஜக
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


