சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்கு எங்கும் நிற்காமல் செல்லும் (சர்ய் நற்ர்ல்) துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை இம்மாத இறுதியில் தொடங்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
சென்னையிலிருந்து மதுரை மற்றும் திருவனந்தபுரத்துக்கு புதிய துரந்தோ ரயில்கள் உள்பட 16 புதிய ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
2011-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட் அறிவிப்பின்படி 16 புதிய ரயில்கள் பத்து நாள்களுக்குள் தொடங்கிவைக்கப்படும் என்று தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சல் தெரிவித்துள்ளார்.
இதில், நான்கு ரயில்கள், 2011 - 12-ம் ஆண்டின் ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப் பட்டது. மற்றவை, 2012 - 13-ம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டவை. இதையொட்டி, சென்னை - மதுரை, சென்னை - திருவனந்தபுரத்திற்கு துரந்தோ ரயில் சேவைகளும், ஜெய்ப்பூர் - ஆக்ராவிற்கு இடையே சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் இம்மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளன.
அதுபோல், பரக்பூர் -அசாம்கார் எக்ஸ்பிரஸ், விசாகப்பட்டினம் - சென்னை எக்ஸ்பிரஸ், கரீம்நகர் - திருப்பதி எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட 16 ரயில்கள் விரைவில் இயக்கப்பட உள்ளன.
சென்ட்ரலில் இருந்து... சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்கள் எழும்பூரில் இருந்துதான் இயக்கப்படும். ஆனால் சென்னை - மதுரை இடையேயான துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் சென்ட்ரலில் இருந்து இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
எழும்பூர் வழித்தடத்தில் ஏற்கெனவே ஏராளமான ரயில்கள் இயக்கப்படுவதால் நெரிசல் அதகிரித்து வருகிறது. இதன் காரணமாகவே மாற்று வழித்தடத்தில் மதுரைக்கான துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட உள்ளது.
"நான் ஸ்டாப்' சேவை: சென்னை சென்ட்ரலில் இருந்து மதுரைக்குப் புறப்படும் துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் எந்த ரயில் நிலையத்திலும் நிற்காது. -பாயின்ட் டு பாயின்ட்- சேவை முறையில் இயக்கப்படும் இந்த ரயில் முழுவதும் குளிரூட்டப்பட்டது. இந்த ரயில் ஈரோடு, கரூர், திண்டுக்கல் வழியாக மதுரை சென்றடையும். சென்னையில் இருந்து திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் வாரம் இரு முறை ரயில் இயக்கப்படும்.
8 மணி 30 நிமிட நேர பயணம்: சென்னையில் இருந்து சென்ட்ரல் மார்க்கமாக மதுரைக்கு துரந்தோ ரயில் புறப்படுவதால் பயணிகள் 8 மணி நேரம் 30 நிமிடத்தில் மதுரைக்குச் சென்றடைவர். இந்த ரயில் சென்ட்ரலில் இருந்து காலை 10.30 மணிக்குப் புறப்பட்டு மதுரைக்கு இரவு 7 மணிக்கு சென்றடையும்.
சென்னை - மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலின் கட்டணம் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை என்று தெற்கு ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

