மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகே கார் மீது மணல் லாரி மோதியதில், சென்னையைச் சேர்ந்த ஒருவர் இறந்தார். மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அப்துல்காதர் மகன் அபுதாகீர் (39) மற்றும் பாரூக் (30), தயூப், வகிதா (21), இவரது குழந்தை ஆகியோர் தூத்துக்குடிக்கு காரில் புறப்பட்டு வந்துள்ளனர்.
திங்கள்கிழமை அதிகாலையில் கொட்டாம்பட்டியை அடுத்துள்ள மணப்பச்சேரி அருகே, நான்குவழிச் சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது, திருச்சியில் இருந்து மதுரைக்குச் சென்ற மணல் லாரி திடீரென இடது ஓரமாகத் திரும்பியதில் கார் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் கார் நொறுங்கியது.
காரில் இருந்த அபுதாகீர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கார் ஓட்டுநர் பீர்முகமது (32) உள்ளிட்ட 4 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு மேலூர் அரசு மருத்துவமனையில் முதலுதவிச் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான மணல் லாரியைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


