பாமக நிறுவனர் ராமதாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சேந்தமங்கலத்தில் எம்ஜிஆர் சிலைக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்டது.
நாமக்கல் அருகே சேந்தமங்கலம் பேருந்து நிலையம் முன் நகர அதிமுக சார்பில், எம்ஜிஆர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ், அந்தக் கட்சி எம்எல்ஏ காடுவெட்டி குரு ஆகியோர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் சேந்தமங்கலம் எம்ஜிஆர் சிலை மீது மர்மநபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில், சிலையின் கால் பகுதியில் லேசான பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த நகர அதிமுக அவைத் தலைவர் ராஜேந்திரன் உள்பட அதிமுகவினர் சம்பவ இடத்தில் திரண்டு, பாமகவினருக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, எம்ஜிஆர் சிலைக்கு தீ வைத்தவர்களை உடனடியாகக் கைது செய்யக் கோரி, சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில், போலீஸôர் வழக்குப் பதிவு செய்து, சிலைக்கு தீ வைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.
பாமகவினர் மறியல் முயற்சி: இந்தச் சம்பவத்தின் தொடர்ச்சியாக, ராமதாஸ், காடுவெட்டி குரு ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாமகவினர் சேந்தமங்கலம் தேர் நிலையம் முன் புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களைப் போலீஸôர் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

