திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

1,500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து பயிற்சி மருத்துவர்கள் 4 பேர் சாவு

குமுளி அருகே வாகமண் கோலாகலமேடு மலைச் சாலையில் 1,500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், பயிற்சி மருத்துவர்கள் 4 பேர் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.

Updated On :1 மே 2013, 11:06 pm

குமுளி அருகே வாகமண் கோலாகலமேடு மலைச் சாலையில் 1,500 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில், பயிற்சி மருத்துவர்கள் 4 பேர் புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தனர்.

கேரள மாநிலம், கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக ஜோசப்ராஜ், அனீஷ், ஆன்டோ, ரதீஷ், அல்போன்ஸ், விஷ்ணு தயாள் ஆகியோர் பணிபுரிந்து வந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை பயிற்சி மருத்துவர்கள் 6 பேரும் கோட்டயத்திலிருந்து காரில் சுற்றுலாத் தலமான வாகமண் வந்துள்ளனர்.

கோலாகலமேட்டுக்கு 3 கிலோமீட்டர் தொலைவில், மலைச்சாலையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவர்கள் வந்த கார் அந்தச் சாலையில் 1,500 அடி பள்ளத்தில் அதிகாலையில் உருண்டு விழுந்ததாகக் கூறப்படுகிறது. காரில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்ட பொதுமக்கள், விபத்து குறித்து காவல் துறையினருக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணியில் ஜோசப்ராஜ், அனீஷ், ஆன்டோ, ரதீஷ் ஆகிய 4 பேரும் சம்பவ இடத்தில் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், பலத்த காயமடைந்த அல்போன்ஸ், விஷ்ணு தாயாள் ஆகியோர் மீட்கப்பட்டு, கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.