எம்.பி.பி.எஸ். இடம் ஒதுக்கக் கோரி வழக்குத் தொடர்ந்துள்ள மாற்றுத் திறனாளிகள் 5 பேரின் ஊனத்தின் சதவீதம் குறித்து ஆராய்வதற்காக டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேடு கிராமத்தைச் சேர்ந்த டி.நளினி உள்ளிட்ட 5 மாற்றுத் திறனாளிகள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். 12-ஆம் வகுப்பு தேர்ச்சியடைந்துள்ள நாங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின் கீழ் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளோம். கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி நடைபெற்ற கலந்தாய்வுக்கு நாங்கள் அழைக்கப்பட்டோம்.
ஏற்கெனவே எங்களின் ஊன சதவீதம் குறித்து எங்கள் மாவட்ட மருத்துவ போர்டைச் சேர்ந்த டாக்டர்கள் பரிசோதித்து சான்றிதழ் அளித்துள்ள நிலையில், கலந்தாய்வு நடைபெற்ற இடத்தில் வேறு டாக்டர்கள் குழுவினர் மீண்டும் பரிசோதனை செய்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட சதவீதத்தை விட மிகுதியான ஊனம் இருப்பதாகக் கூறி எங்களுக்கு எம்.பி.பி.எஸ். இடம் தர மறுத்து விட்டனர் என்று அந்த மனுக்களில் கூறியுள்ளனர்.
இந்த மனுக்கள் மீது செவ்வாயன்று விசாரணை நடத்திய நீதிபதி கே.கே.சசிதரன், மனுதாரர்களின் ஊன சதவீதம் குறித்து 3 பேர் கொண்ட புதிய டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை நடத்தி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். வழக்கின் விசாரணை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

