போலி சுங்க அலுவலகம் நடத்தி, வேலை வாங்கித்தருவதாக பல கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக காஞ்சிபுரம் இளைஞரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் நாராயணபாளையம் தெருவைச் சேர்ந்த முத்து மகன் அன்பரசன் (27). எம்.பி.ஏ. பட்டதாரி. கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஈஸ்வர ராமச்சந்திரன்.
நண்பர்களான இவர்கள் இருவரும் சென்னை மடிப்பாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து போலி சுங்க அலுவலகம் நடத்தி வந்துள்ளனர்.
மேலும், பேஸ்புக் போன்ற லிங்க்டு (கஐசஓஉஈ) என்ற இணையதளத்தின் மூலம் காஞ்சிபுரம் அன்பரசன், இந்திய அரசின் நிதித்துறை அமைச்சகத்தின் கலால் மற்றும் சுங்கத்துறை என்று விளம்பரம் செய்து சுங்க அதிகாரி போன்று பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை அதில் இணைத்துள்ளார். போலி அலுவலகத்தில் சுங்க அதிகாரிகளாக சிலரை இருவரும் பணியில் அமர்த்தியுள்ளனர்.
அவர்களிடம் தலா ரூ. 10 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை வாங்கிக்கொண்டு, போலியாக, சுங்க இலாகாவின் முத்திரையுடன் கூடிய பணி சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் அவர்களுக்கு சுங்க இலாகா அதிகாரிகள் என அடையாள அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களாக அவர்களுக்கு ரூ. 14 ஆயிரம் வீதம் சம்பளமும் வழங்கினார்களாம்.
இந்த நிலையில் கடந்த மாதம் சம்பளம் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த அவர்கள் விசாரணை செய்ததில் அது போலியான அலுவலகம் என்று தெரிய வந்ததாம். இதைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் காஞ்சிபுரம், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் தங்களிடம் தலா ரூ. 10 முதல் ரூ. 15 லட்சம் வரை வாங்கி ஏமாற்றியுள்ளனர் என்று காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளரிடம் செவ்வாய்க்கிழமை இரவு புகார் செய்துள்ளனர்.
எஸ்.பி. விஜயகுமார் உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி., பாஸ்கரன் மேற்பார்வையில், குற்றப்பிரிவு டி.எஸ்.பி. ரமேஷ்பாபு தலைமையில், இஸ்பெக்டர் சிகாமணி உள்ளிட்ட போலீஸார் அன்பரசனை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், புகார் செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி தந்துவிடுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அன்பரசன் பயன்படுத்தி வந்த 4 விலை உயர்ந்த கார்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இதே போல் சென்னையில் இவரிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் சார்பில் அவர்களது வழக்குரைஞர்கள் சிலர் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்திருந்தனர். சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 60 பேர் இவர்களிடம் ஏமாந்து இருப்பதாக தெரிவித்தனர். சென்னையில் மட்டும் 35 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் தெரிகிறது.
மேலும் எத்தனை பேர் ஏமாற்றப்பட்டனர் என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சுவர் இடிந்து, சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் பலி!

தில்லி சட்டப்பேரவைக்கு வெடிகுண்டு மிரட்டல்

கார்த்திகை தீபம் தொடரில் பாண்டவர் இல்லம் நடிகை!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


