இலங்கையில் அனுராதபுரம் சிறையிலிருக்கும் ராமேசுவரம் மீனவர்கள் 41 பேருக்கும் மன்னார் மாவட்ட நீதிமன்றம் வரும் 28-ஆம் தேதி வரை சிறைக் காவலை நீட்டிப்பு செய்து புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ராமேசுவரத்திலிருந்து கடந்த ஜூலை 7-ஆம் தேதி 5 படகுகளில் சென்ற 21 மீனவர்கள் மற்றும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி 5 படகுகளில் மீன் பிடிக்கச் சென்ற 20 மீனவர்களையும் இலங்கை கடற்படை எல்லை தாண்டியதாகக் கைதுசெய்து, மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அனுராதபுரம் சிறையில் அடைத்திருந்தது.
இவர்கள் 41 பேரும் புதன்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தபடி, நீதிபதி ஆனந்தி கனகரெத்தினம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு 28-ஆம் தேதி வரை, சிறைக் காவலை நீட்டிப்புச் செய்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத் தொடர்ந்து ராமேசுவரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 41 பேரும், மீண்டும் அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்கள் அனைவரும் புதன்கிழமை விடுதலையாகி விடுவார்கள் என எதிர்பார்த்துக் காத்திருந்த அவர்களின் உறவினர்கள் இச் செய்தியால் அதிர்ச்சியும், கவலையும் அடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உணவு பாக்கெட்டுகளில் தவறான லேபிள்கள்: 8 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ்

15.6.1976: இந்தியா - பாக். விமான தொடர்பு: பேச்சு ஆரம்பம்

இந்தியாவின் சாதனைகளை குறைத்துப் பேசும் ராகுல்: நிா்மலா சீதாராமன் கண்டனம்!
கிருஷ்ணகிரி அருகே பெண்களை மிரட்டி நகை, பணம் பறித்த வழக்கில் 5 போ் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


