அரக்கோணம் அருகே சித்தேரியில் ரயில் தடம்புரண்ட விபத்தில் சேதமடைந்த தண்டவாளங்களுக்கு பதிலாக ரூ.20 லட்சத்தில் புதிய தண்டவாளங்களும் அதன் இணைப்புகளும் பொருத்தப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிகார் மாநிலம் முசாஃபர்பூரில் இருந்து கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் அரக்கோணத்தை அடுத்த சித்தேரியில் புதன்கிழமை காலை தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 33 பேர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தையடுத்து சென்னை சென்ட்ரலில் இருந்து புதன்கிழமை செல்ல வேண்டிய 12 ரயில்களும் வியாழக்கிழமை செல்ல வேண்டிய 7 ரயில்களும் ரத்து செய்யப்பட்டன.
விபத்தில் முற்றிலுமாக சேதமடைந்த தண்டவாளம் மற்றும் அதன் பகுதிகளை சீரமைக்கும் பணியை ரயில்வே நிர்வாகம் மேற்கொண்டது. தண்டவாளங்கள் முற்றிலுமாக சேதமடைந்ததால் புது தண்டவாளம் மற்றும் இதர பாகங்களை பொருத்த முடிவு செய்யப்பட்டது.
ரூ.20 லட்சம்: அரக்கோணம் - காட்பாடி இடையிலான வழித்தடத்தில் சுமார் 200 மீட்டர் நீளத்துக்கு தண்டவாளங்கள் சேதமடைந்திருந்தன. இதனால் ரூ.20 லட்சம் மதிப்பிலான புதிய தண்டவாளம் மற்றும் அதன் இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக ஒரு கிலோ மீட்டர் நீளத்துக்கான தண்டவாளம் மற்றும் இதர பாகங்களை பொருத்த ரூ.2 கோடி செலவாகும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுபோன்று விபத்தில் முற்றிலுமாக தண்டவாளம் சேதமடையும் இடங்களில் புதிய தண்டவாளங்களும் அதன் இணைப்புகளையும் பொருத்துவதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தனர்.
40 விபத்துகள்: ரயில் தண்டவாள கோளாறுகள் மற்றும் விரிசல்களால் ஆண்டுக்கு இந்திய அளவில் 32 சிறிய மற்றும் பெரிய விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த எண்ணிக்கை 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆண்டுக்கு 40 விபத்துகள் என்றிருந்தது.
இப்போது இந்த விபத்தின் அளவு சற்றே குறைந்திருந்தாலும் தண்டவாள விரிசல்கள் மற்றும் துருப்பிடிப்பது ஆகியவை குறையவில்லை.
முக்கியமாக ரயில்களில் இருந்து தண்டவாளங்களில் விழும் கழிவுகளால்தான் தண்டவாளங்கள் துருப்பிடிக்க காரணமாக உள்ளன என ரயில்வேயின் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக ஆண்டுக்கு ரூ.300 கோடி செலவிடப்படுகிறது. ஆனால் இன்னும் 15 ஆண்டுகளுக்கு ரயில் தண்டவாளங்கள் துருப்பிடிப்பதை தடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.
மாற்று வழி: துருப்பிடிக்காத தண்டவாளங்களை உருவாக்கும் பணியில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது. இந்தியா முழுவதும் துருப்பிடிக்காத தண்டவாளங்களை பொருத்துவது சாத்தியமில்லை. ஆனால் அடிக்கடி விபத்து நேரும் இடத்தில் மட்டுமாவது இரும்பு அல்லாத வேறு உலோகங்களால் உருவாக்கப்பட்ட தண்டவாளத்தை பொருத்தும் பணியை மேற்கொள்ள ரயில்வே முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் ஜல்லிக் கற்கள் இல்லாமல் முழுவதும் காங்கிரீட்டினால் ரயில் தண்டவாளங்கள் வட இந்தியாவின் சில பகுதிகளில் இப்போது அமைக்கப்பட்டு வருகிறது.
இவ்வகை தண்டவாளங்களை பொருத்துவதால் வேகமாக செல்லும் ரயிலின் அதிர்வை இவை பெருமளவு தாங்கிக்கொள்ளும். மேலும் பயணிக்கு அதிர்வில்லாத பயணத்தை தரும்.
கழிவு கிடங்குக்கு சென்ற 11 ரயில் பெட்டிகள்
அரக்கோணம் அருகே ரயில் தடம்புரண்டதால் சேதமடைந்த 11 பெட்டிகளும் கழிவு கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது.
விபத்துக்குள்ளான 7 படுக்கை வசதி கொண்ட பெட்டியையும், 4 ஏசி பெட்டியையும் கழிவாக்குவதன் மூலம் ரயில்வே துறைக்கு ரூ.55 லட்சம் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் புதிதாக ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டியை தயாரிக்க ரூ.75 லட்சமும், ஏசி பெட்டிகளை தயாரிக்க ரூ.1.5 கோடியும் செலவாகும் என்று இணைப்பு பெட்டி தொழிற்சாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


