புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

மெட்ரோ ரயில்: சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணி தீவிரம்

சென்னை மெட்ரோ ரயில் பணிகளில் அண்ணா நகர் மற்றும் ஷெனாய் நகரில் சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

News image
Updated On :7 ஜூலை 2013, 9:27 pm

சென்னை மெட்ரோ ரயில் பணிகளில் அண்ணா நகர் மற்றும் ஷெனாய் நகரில் சுரங்க ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

சென்னையில் பல்வேறு இடங்களில் சுரங்கத்தில் அமையவிருக்கும் மெட்ரோ ரயில் நிலையப் பணிகளும், சுரங்க வழிப்பாதை பணிகளும் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக நடைபெற்று வருகின்றன.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இதில் 24 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப் பாதை அமைக்கப்படுகிறது. வண்ணாரப்பேட்டை முதல் திரிசூலம் விமான நிலையம் இடையேயான மெட்ரோ ரயில் பாதையில் வண்ணாரப்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை சுரங்கப் பாதையிலும், சைதாப்பேட்டை முதல் விமான நிலையம் வரை மேம்பாலம் வழியாகவும் ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

ரயில் நிலையங்கள்: மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் 19 ரயில் நிலையங்களும், உயர்மட்டப் பாதையில் 13 ரயில் நிலையங்களும் அமைக்கப்படுகின்றன.

இந்தியாவில் இப்போது செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் திட்டங்களில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில்தான் அதிகபட்சமாக 24 கிலோ மீட்டர் தொலைவு சுரங்க ரயில் பாதை அமைகிறது.மெட்ரோ ரயில் சுரங்கம் அமைக்கும் பணிகளில் டனல் போரிங் இயந்திரம் கடந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ஈடுபட்டு வருகிறது. மொத்தமாக 12 ராட்சத டனல் போரிங் இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. முதல்முறையாக சைதாப்பேட்டை சுரங்க ரயில் நிலையத்தையும், இரண்டாவதாக கிழக்கு அண்ணா நகர் ரயில் நிலையத்தையும் டனல் போரிங் இயந்திரம் சென்றடைந்துள்ளது. இதன் காரணமாக அந்த ரயில் நிலையங்களை கட்டமைக்கும் பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.

இப்போது அண்ணாநகர் டவர் மற்றும் ஷெனாய் நகர் மெட்ரோ சுரங்க ரயில் நிலையங்களில் சுற்றுச் சுவர் மற்றும் ஸ்லாப் அமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் 2014-ஆம் ஆண்டு இறுதியில் முடிக்கப்பட்டு சுரங்கப் பாதை வழியாக 2015-ஆம் ஆண்டு தொடக்கத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று தெரிகிறது.

உத்தேச கட்டண விவரம்

சென்னை மெட்ரோ ரயில் பயணத்துக்கான உத்தேச கட்டணத்தை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்தக் கட்டண விவரம் இப்போது இருக்கும் நிலமையைப் பொருத்து திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்கால செலவுகளை கணக்கில்கொண்டு இதில் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தொலைவு (கி.மீ.) கட்டணம் (ரூ.)

0 - 2 8

2 - 4 10

4 - 6 11

6 - 9 14

9 - 12 15

12 - 15 17

15 - 18 18

18 - 21 19

21 - 24 20

24 - 27 22

27 கிலோ மீட்டக்கு மேல் 23

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.