ராமேஸ்வரம் பாம்பன் பாலம் கட்டிமுடிக்கப்பட்டு நூறு ஆண்டுகளை நிறைவு பெறுகிறது. இதனைக் கொண்டாடும் வகையில் இந்திய ரயில்வே தனது 160-வது ஆண்டு கால சேவை மற்றும் சாதனையை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை புதன்கிழமை (ஜூலை 10) நடத்துகிறது.
பாம்பனில் இயற்கையாகவே கால்வாய் அமைந்துள்ளது. ஆங்கிலேயர்களால் 1854ல் 80 அடி அகலம், 14 அடி ஆழம், 4,400 அடி நீளத்திற்கு கால்வாய் வெட்டப்பட்டது.
இணைப்பு திட்டம்: கடந்த 1876 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் இந்தியா-இலங்கை இடையே போக்குவரத்திற்கான இணைப்பை ஏற்படுத்த முடிவு செய்தனர். இதற்காக ஜெனரல் மன்றோ என்பவரால் ஆய்வு நடத்தப்பட்டது. இத்திட்டம் ஆய்வு நிலையிலே கைவிடப்பட்டது. சென்னை டெபுடி ஜெனரல் ரைட்சன் என்பவரால் டுவின்ஸ் ரயில் பெர்க்கி சர்வீஸ் என்ற திட்டம் தயாரிக்கப்பட்டது. அதிகத்தொகை என்பதால் இத்திட்டமும் கைவிடப்பட்டது.
இறுதித் திட்டம்: இறுதியாக கீழே கப்பலும், மேலே ரயிலும் செல்லும் வகையில் 1899 ஆம் ஆண்டு டபுள் லீப் கேண்டிலிவர் பிரிட்ஜ் பாலம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்காக 1902 ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசால் முறையான அறிவிப்பும் செய்யப்பட்டது. வர்த்தக போக்குவரத்திற்காகவே பாம்பன் கடலில் பாலம் கட்ட பிரிட்டிஷ் அரசு முடிவு செய்தது. இத்திட்டப்படி பாம்பன் கடலில் தூக்கு பாலம் மற்றும் தனுஷ்கோடி வரை ரயில் பாதை அமைக்க வேண்டும். அங்கிருந்து கப்பலில் செல்வதற்கு தனுஷ்கோடி மற்றும் தலைமன்னாரில் துறைமுகம் அமைக்க வேண்டும்.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு தடைகளை கடந்து கடலுக்குள் 144 தூண்களுடன் பாம்பன் பாலம் 1913-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
ரயில் பாலம்: ஜெர்மனியைச் சேர்ந்த ஜெர்ஷர் லேடிங் கம்பெனி பொறியாளர் ஜெர்ஷர் என்பவரின் தலைமையில் 1913 ஜூலை மாதம் கப்பல் செல்லும் கால்வாயில் 124 அடி ஆழத்திற்கு இரண்டு தூண்கள் கட்டப்பட்டு தூக்கு பாலம் கட்டும் பணி டிசம்பரில் முடிக்கப்பட்டது.
1914 ஆண் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்தும், தனுஷ்கோடி தலைமன்னார் கப்பல் போக்குவரத்தும் துவங்கப்பட்டது. அப்போது முதல் சென்னையிலிருந்து ரயிலில் வரும் பயணிகள் ராமேஸ்வரத்துக்கு இப்பாலம் வழியாக தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர். கடந்த பிப்ரவரி 24ம் தேதி நூறாவது ஆண்டில் காலடி எடுத்து வைத்தது பாம்பன் பாலம்.
புகைப்படக் கண்காட்சி
சென்னை, ஜூலை 8: இந்திய ரயில்வேயின் 160-வது ஆண்டு கால சாதனையை விளக்கும் புகைப்படக் கண்காட்சி புதன்கிழமை தொடங்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
இந்திய ரயில்வேயின் இந்தப் புகைப்படக் கண்காட்சியை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா புதன்கிழமை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள லலித் கலா அகாதெமியில் தொடங்கி வைக்கிறார்.
இந்தக் கண்காட்சி பொது மக்கள் பார்வைக்காக ஜூலை 11-ம் தேதியில் இருந்து ஜூலை 16-ம் தேதி வரை நடைபெறும். இந்தக் கண்காட்சிக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. இந்த அரிய புகைப்படக் கண்காட்சியை பொது மக்கள் காலை 11 மணியில் இருந்து இரவு 7 மணி வரை கண்டுகளிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆலையில் தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு

வருவாய்த் துறையினா் பேச்சு: தோ்தல் புறக்கணிப்பை திரும்பப் பெற்ற மலைவாழ் மக்கள்

வாக்குச் சாவடி மையங்களில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

ஆற்காட்டில் திமுக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


