மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

சங்கரன்கோவில் ஆடித்தவசு விழா: நெல்லை மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தவசு விழாவையொட்டி இம் மாவட்டத்திற்கு

Updated On :8 ஆகஸ்ட் 2014, 2:11 pm

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தவசு விழாவையொட்டி இம் மாவட்டத்திற்கு சனிக்கிழமை (ஆக. 9) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு.கருணாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சங்கரன்கோவிலில் உள்ள அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் ஆடித்தவசு விழா சனிக்கிழமை (ஆக.9) நடைபெறுகிறது. இந்த நாளில் இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கும் மற்றும் பொது நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 இன் கீழ் அறிவிக்கப்பட்டும் விடுமுறை அல்ல. எனவே, வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. உள்ளூர் விடுமுறை நாளன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நடத்தப்படும் முக்கியத் தேர்வுகள் நடைபெறும். திருநெல்வேலி மாவட்ட கருவூலம், அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களைக் கொண்டு அரசு காப்புகள் தொடர்பான அவசரப் பணிகளை கவனிப்பதற்காகச் செயல்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.