விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் வெள்ளைத்திரி கட்டுக்களை கடத்தியதாக வச்சக்காரப்பட்டி போலீஸார் 2 பேரை கைது செய்தனர்.
விருதுநகர் அருகே சிவகாசியில் இருந்து முதலிப்பட்டி வழியாக அனுமதியின்றி பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் கருந்திரி கட்டுக்கள் கடத்திச் செல்வதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் வியாழக்கிழமை அதிகாலையில் முதலிப்பட்டி பேருந்து நிறுத்தம் பகுதியில் வச்சக்காரப்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் குமரேசன் தலைமையில் போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் இரண்டு பேர் மூட்டைகளுடன் வந்துள்ளனர். அப்போது, அவர்கள் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனையிட்ட போது சாக்கு மூட்டையில் பட்டாசுகளுக்கு பயன்படுத்தப்படும் 2200 வெள்ளைத்திரி கட்டுக்கள் இருந்தது. மேலும், அவர்களிடம் விசாரணை செய்ததில் சிவகாசி புதுத்தெருவைச் சேர்ந்த ராஜ்(27), ராஜா(25) என்பதும் முதலிப்பட்டி பகுதியில் உள்ள பட்டாசு ஆலைக்கு கொண்டு செல்வதாகவும் தகவல் தெரிவித்தனர். உடனே அவர்களிடம் இருந்த வெள்ளைத்திரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். பின்னர் மேற்குறிப்பிட்ட 2 பேர் மீதும் வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு

கென் சினிமாவின் சொத்து... யூத் படத்தைப் பாராட்டிய ரிஷப் ஷெட்டி!

கருவுற்று இருப்பதை வித்தியாசமான முறையில் அறிவித்த தீபிகா படுகோன்!

படிப்பு மட்டும் போதுமா? செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்?
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

