ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

விருதுநகர் மாவட்டத்தில்  குறிப்பிட்ட நீர் நிலைகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும்

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட பகுதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன்

Updated On :27 ஆகஸ்ட் 2014, 1:38 pm

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட பகுதிகள் வழியாக ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

     இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறி்ப்பு: விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 29-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதற்காக வழிபாடு நடத்த வைக்கப்படும் சிலைகள் எவ்வகையிலும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில்,  களிமண்ணால் செய்து சுடாப்படாமலும், ராசாயன கலவை பூச்சு இல்லாமலும் இருக்க வேண்டும். மேலும், இந்த விழாவில் வழிபாடு நடத்தி முடிந்த பின் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள வழியாக ஊர்வலமாக சென்று நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்.

    இதில், விருதுநகர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து சிலைகள் கல் கிணற்றில் கரைக்க வேண்டும். இதேபோல், ஆவுடையாபுரம் சிலைகள் அப்பகுதியில் உள்ள பயன்படாத கிணற்றிலும், சிவகாசி நகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் இருந்து வரும் சிலைகள் அனைத்தும், தெய்வானை நகரில் உள்ள பயன்படாத கிணற்றிலும், எம்.புதுப்பட்டி, மாரனேரி கிராமங்களில் இருந்து வரும் சிலைகள் மடவார்குளம் கண்மாயிலும், அருப்புக்கோட்டை பகுதியிலிருந்து வரும் சிலைகள் பந்தல்குடி சாலையில் உள்ள பெரிய கண்மாயிலும், பந்தல்குடி கிராமத்தில் இருந்து வரும் சிலைகள் அக்கிராம பெரிய கண்மாயிலும் கரைக்க வேண்டும்.

    ராஜபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சிலைகள் அருகில் உள்ள வடுகவூரணியிலும், அம்மாபட்டி, ஏழாயிரம்பண்ணை, ஆலங்குளம் பகுதியில் இருந்து வரும் சிலைகள் வரும் சிலைகள், அப்பகுதியில் உள்ள பயன்படாத கிணறு மற்றும் ஆலங்குளம் கல்குவாரியிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியிலிருந்து வரும் சிலைகள் அருகில் உள்ள மடவார்குளத்திலும், கிருஷ்ணன்கோவில் சிலைகள் ராமச்சந்திராபுரம் கண்மாயிலும், குன்னூரியிலிருந்து வரும் சிலைகள் அப்பகுதி கண்மாயிலும், வத்திராயிருப்பு, கூமாபட்டி பகுதியிலிருந்து வரும் சிலைகள் மகராஜாபுரம், கூமாபட்டி கண்மாய்களிலும் கரைக்க வேண்டும் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.