மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

நெல்லை மாவட்டத்தில் சூரியமின் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு

சங்கரன்கோவில் வட்டம்,  மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட நடுவக்குறிச்சி, கஸ்பா, வல்லராமபுரம், அகிலாண்டபுரம், பொய்கைமேடு, குத்தாலப்பேரி, ஆட்கொண்டார்குளம், கே.வி.ஆலங்குளம், கீழவீரசிகாமணி

News image
Updated On :18 ஜூலை 2014, 1:06 pm

திருநெல்வேலி மாவட்டத்தில் சூரியஒளி மின் உற்பத்தி திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சங்கரன்கோவில் வட்டம்,  மேலநீலிதநல்லூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட நடுவக்குறிச்சி, கஸ்பா, வல்லராமபுரம், அகிலாண்டபுரம், பொய்கைமேடு, குத்தாலப்பேரி, ஆட்கொண்டார்குளம், கே.வி.ஆலங்குளம், கீழவீரசிகாமணி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஆட்சியர் அலுவலகத்திற்கு வெள்ளிக்கிழமை வந்து அளித்த மனு:
எங்கள் பகுதியில் சுமார் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களை, தமிழக அரசு சூரிய ஒளி மின் திட்டத்திற்காக வருவாய்த்துறை மூலம் கையகப்படுத்துவதற்காக கணக்கீட்டு பணியினை தொடங்கியுள்ளதாக அறிகிறோம்.

மேலும், தனியார் காற்றாலை உரிமையாளர்களும் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி வரும் நிலையில் பலர் விவசாயத்தை கைவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அரசின் சூரியஒளி மின் திட்டத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் திட்டத்தை மறு பரிசீலனை செய்யவேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.