பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முல்லை பெரியாறு அணை லோயர்கேம்ப் மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி சோதனை ஓட்டம்

     பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்ட பின்னர், ஒரு வாரத்திற்குக பின்னர், லோயர்கேம்ப் வரும் ராட்சத குழாயில் அடுத்தடுத்த ஜெனரேட்டர்களில்

News image
Updated On :7 ஜூன் 2014, 2:21 pm

அறிவழகன்

     பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட்ட பின்னர், ஒரு வாரத்திற்குக பின்னர், லோயர்கேம்ப் வரும் ராட்சத குழாயில் அடுத்தடுத்த ஜெனரேட்டர்களில் சனிக்கிழமை முதல் சோதனை ஓட்டம் துவக்கியுள்ளது.

            முல்லைப் பெரியாறு அணையிலிருந்து சுரங்கத்தின் வழியாக தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் தண்ணீர் தமிழக வனப்பகுதியில் உள்ள போர்-பை அணைக்கு வரும், அங்கிருந்து, குமுளி மலையில் வால்வு கௌஸ் மூலம் 4 ராட்சத குழாய் வழியாக சென்று லோயர்கேம்ப் பெரியார் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் 4 ஜெனரேட்டர்கள் மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு, பின்னர் லோயர்கேம்ப் பெரியாற்றில் பாசனத்திற்கும், குடிநீருக்கும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

           வால்வு கௌஸ்யிலிருந்து 1,200 அடி உயரமுள்ள 4 ராட்சத குழாயில், 5 ஆண்டுக்கு ஒரு முறை உள்ளே, வெளியே பெயிண்ட் அடிப்பது வழக்கம். இந்த ஆண்டு கடந்த பிப்பரவரி மாதம் பெயிண்ட் அடிக்கும் பணி துவங்கியது. ஜீன் முதல் தேதிக்கு முன்னர் பணியை முடிக்க வேண்டும் என்ற ஒப்பந்தத்தோடு பணி துவங்கியது. ஆனால், குமுளி மலை நிலச்சரிவு காரணமாக பணி ஒரு வாரம் காலதாமதமானது, வழக்கமாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும்போது, லோயர்கேம்பில் மின்சார துவங்கும், ஆனால், இந்தாண்டு பணி முடியாததால், மின்சாரம் உற்பத்தி துவங்கவில்லை.

            3 ஜெனரேட்டர்களில் 42 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய முடியும், அதற்கு பெரியாறு அணையிலிருந்து ஒரு ராட்சத குழாயில் 420 க.அடி தண்ணீர் திறந்துவிட வேண்டும், தற்போது, பாசனத்திற்கும், குடிநீருக்கும் 200 க.அடி தண்ணீர் மட்டும் திறந்து விடப்படுவதால், போர்-பை அணையில் தண்ணீர் தேக்கப்பட்டு

முதல் 3 ராட்சத குழாய் மூலம் 3 ஜெனரேட்டர்களில் அடுத்தடுத்து  சனிக்கிழமை சோதனை ஓட்டமாக மின்சார உற்பத்தி செய்யப்படுகிறது. மின்உற்பத்தியை தொடங்க கூடுதலாக குறைந்த அளவு 50 க.அடி தண்ணீரையாவது பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டால், 20 மெகாவாட் மின்சார உற்பத்தி செய்ய முடியும் என்று தமிழக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

             தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி கூறும்போது, தமிழக அரசு 200 கன அடி தண்ணீர்தான் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. அதனால், மீண்டும் அரசு உத்தரவு வரும்வரை கூடுதலாக தண்ணீர் திறந்துவிடமுடியாது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.