சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தரிச்சனத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவர்கள் உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து அன்னதானம் வழங்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து கடலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி எம்.பி.ராஜா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன தேர்த்திருவிழா மற்றும் தரிசனத்தின் போது பொதுமக்களுக்கு அன்னதானம் செய்ய விரும்புவர்கள் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து, பாதுகாப்பான உணவு வழங்கிட வேண்டும். அன்னதானம் செய்ய விரும்புவர்கள், கோயில் நிர்வாகம் மற்றும் காவல்துறை அனுமதி பெற்றபின், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து கொள்ள வேண்டும். சிதம்பரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள உணவு பாதுகாப்பு அலுவலர் பத்மநாபனை தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். அவரது அலைபேசி எண்: 97895 41853.