: விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் குரூப்-2 தேர்வில் 20,863 பேர் பங்கேற்று தேர்வு எழுத இருப்பதாகவும், அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாகவும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-2 தேர்வு (ஞாயிற்றுக்கிழமை) இன்று நடைபெற இருக்கிறது. இம்மாவட்டத்திலிருந்து இத்தேர்வு எழுதுவதற்காக 20863 பேர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்காக விருதுநகர், அருப்புக்கோட்டை, ராஜபாளையம், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய பகுதிகளில் 43 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், தேர்வு மையங்களில் அனைத்து வசதிகளும் செய்து கொடுப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தேர்வு மையங்களுக்கு வந்து செல்லும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் நகர பேருந்துகள் இயக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மாற்றுத்திறனாளி மற்றும் பார்வையற்றோர்கள் எளிதாக செல்லும் வகையில் தேர்வு மையங்களில் கீழ்தளத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில், தேர்வு அறைகளில் முறைகேடுகளை தடுக்கும் வகையிலும், கண்காணிக்கவும் கண்காணிப்பாளர்கள் மற்றும் பறக்கும் படை அலுவலர்கள் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், அறைகளில் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோவில் பதிவு செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செல்வப்பெருந்தகை சிறைபிடிப்பு! முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு!

வருமான வரித்துறை அதிகாரிகளால் சிறைப்பிடிப்பு: செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு!
திருட மட்டும்தான் தெரியும்... கர டிரைலர்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

