காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

நவ.29-ல் கடை அடைப்பு குறித்து சிதம்பரத்தில் வர்த்தகர்களிடம் துண்டு பிரசுரம் விநியோகம்

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு இரு தடுப்பணைகள் கட்டுவதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் வருகிற நவ.29-ம் தேதி

News image
Updated On :27 நவம்பர் 2014, 2:14 pm

ஜி.சுந்தரராஜன்

காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு இரு தடுப்பணைகள் கட்டுவதை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம், காவிரி கண்காணிப்புக்குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும் வருகிற நவ.29-ம் தேதி அனைத்து கட்சி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சார்பில் காவிரி டெல்டா கடை மடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் கடைஅடைப்பு, ரயில்மறியல், சாலைமறியல் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

நவ.29-ம் தேதி அன்று விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு கோரியும், கடைகளை அடைக்க வலியுறுத்தியும் சிதம்பரம் நகரில் அனைத்து கட்சி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் அளித்து வலியுறுத்தினர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சி.மாதவன், மாவட்ட அமைப்பாளர் வி.எம்.சேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு, மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் பி.கற்பனைசெல்வம், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.