மகள், பேத்தியை காணவில்லை: பாட்டி சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார்
சிதம்பரம் மின்நகரை 5வது குறுக்குத்தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி வாசுகி (50). இவரது வீட்டிற்கு சென்னை கே.கே.நகரில் வசிக்கும் அவரது மகளும், ராஜசேகரன் மனைவியுமான கமலாதேவி


தனது வீட்டிற்கு வந்த மகள் மற்றும் பேத்தியை காணவில்லை என சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் பாட்டி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை புகார் அளித்துள்ளார்.
சிதம்பரம் மின்நகரை 5வது குறுக்குத்தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி வாசுகி (50). இவரது வீட்டிற்கு சென்னை கே.கே.நகரில் வசிக்கும் அவரது மகளும், ராஜசேகரன் மனைவியுமான கமலாதேவி (33), பேத்தி நந்தினி (3) ஆகியோர் வந்து தங்கியிருந்தனர். கடந்த நவ.20-ம் தேதி உடல்நிலை சரியில்லை மருத்துவமனைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. சென்னையில் உள்ள வீட்டிற்கும் செல்லவில்லை. உறவினர்கள் வீட்டில் தேடி பார்த்தும் கிடைக்காததால் வாசுகி, தனது வீட்டிற்கு வந்த மகள், பேத்தியை காணவில்லை என சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...