கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு! மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் நாளை தொடக்கம்!மேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!இந்தியாவுக்கு வரவேண்டிய கப்பல்கள் ஹோா்முஸ் நீரிணையில் சிக்கித் தவிப்பு!21 மாநிலங்கள் - யூனியன் பிரதேசங்களுக்கு மீண்டும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடுஈரான் பொதுக் கட்டமைப்பை நிா்மூலமாக்குவோம்: டிரம்ப் மிரட்டல்
/

விராலிமலையில் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: அதிஷ்டவசமாக உயிர் தப்பிய 31 பயணிகள்

விராலிமலை நான்கு வழிச்சாலையில் புதன்கிழமை அதிகாலை லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிறுகாயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2015, 4:38 am

சி. உதயகுமார்

விராலிமலை நான்கு வழிச்சாலையில் புதன்கிழமை அதிகாலை லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் சிறுகாயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

திருவனந்தபுரத்தில் இருந்து செவ்வாய்கிழமை 31 பயணிகளை ஏற்றிக்கொண்டு விராலிமலை வழியாக சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து சென்று கொண்டிருந்தது, பேருந்தை கேரள மாநிலம் கொல்லங்கோடுவைச் சேர்ந்த தங்கப்பன் மகன் யேசுதாஸ்(43) ஓட்டியுள்ளார்.

இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை, விராலிமலை நான்கு வழிச்சாலை மாதிரிபட்டி பிரிவு அருகே பேருந்து வந்த போது, தூத்துக்குடியில் இருந்து ஆந்திர மாநிலம் குண்டூருக்கு உப்பு ஏற்றிக்கொண்டு, பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் அரசு பேருந்து மோதியுள்ளது.

இதில் பேருந்தின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்த நிலையில் பயணிகள் சிறுகாயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். காயமடைந்தவர்கள் விராலிமலை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து விராலிமலை காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.