என்.எல்.சி: போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை
கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. தொழிலாளர்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர்.


கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. தொழிலாளர்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த வளாகத்தைச் சுற்றிலும் தொழிலாளர்களின் கூட்டம் திரண்டுள்ளனர்.
நேற்று தலைமையகத்தை நோக்கி முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் 2,600 பேர் கைதாகினர். இதில் பேச்சு வார்த்தை குறித்த விளக்கங்களைக் கேட்டு தொழிலாளர்கள் தொழிற்சங்க நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று மாலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவித்த பின்னரும் மண்டபத்தை விட்டு வெளியேறாமல் போராட்டத்தை நடத்தினர். இந்நிலையில் இன்று அண்ணா தொழிற்லாளர் ஊழியர் சங்கத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக துமுக, அண்ணா தொழிலாளர் ஊழியர் சங்க நிர்வாகிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். மூன்று பிரிவுகளாக ஊதிய உயர்வு வழங்க என்.எல்.சி நிறுவனம் முன்வந்துள்ளதாக தெரிய வருகிறது. இதில் 10 ஆண்டு சர்வீஸ் உள்ளவர்களுக்கு 12 சதவீதமும், 20 ஆண்டுக்கு 15 சதவீதமும் 30 ஆண்டுகளுக்கு 16 சதவீதமும் வழங்கப்படும் என யூகத்தில் உள்ளனர்.
இதனால், திங்கள் கிழமைக்குள் வேலைநிறுத்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிய வருகிறது. தொழிலாளர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...