தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

என்.எல்.சி பேச்சு வார்த்தை தொடங்கியது: நாளை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் அறிவிப்பு

என்.எல்.சி அதிகாரிகளுக்கும் தொழிற் சங்க நிர்வாகிகளுக்கும் பேச்சு வார்த்தை தொடங்கியது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக்....

News image
Updated On :13 ஆகஸ்ட் 2015, 7:29 am

சீனிவாசன்

என்.எல்.சி அதிகாரிகளுக்கும் தொழிற் சங்க நிர்வாகிகளுக்கும் பேச்சு வார்த்தை தொடங்கியது. ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திக் கடந்த 25 நாட்களாக என்.எல்.சி நிரந்தர தொழிலாளர்கள், போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பலகட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றம் இல்லாமல் இருந்து வருகின்றது.

கடந்நத இரண்டு நாட்களுக்கு முன் தொமுச தலைவர் திருமாவளவன் பணிநீக்கம் செய்து என்.எல்.சி நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியது. இச்செயலைக் கண்டிக்கும் வகையில் ஒப்பந்த தொழிலாளர்களும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர். அதன்படி 50 சதவீதமாக ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. இன்று, 30 சதவீதமான ஒப்பந்த தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், என்.எல்.சி நிறுவன தலைவர் சுரேந்திர மோகன் தலைமையில், என்.எல்.சி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளுக்கும் இடையே வட்டம் 1-யில் உள்ள விருந்தினர் மாளிகையில் 12.25-க்கு பேச்சு வார்த்தை தொடங்கியது.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரத்தை அறிவித்தும், உண்ணாவிரத பந்தலில் சுதந்திர தினத்தை கொண்டாடுவோம் எனவும் தெரிவித்திருந்தனர். நிரந்தர தொழிலாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவாக ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.