பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

செப்-2ல் அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் நியாயவிலைக் கடைகள் பணியாளர் சங்கம் பங்கேற்கும்: கு.பாலசுப்பிரமணியன்

தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் நலன் கருதி வருகிற செப்.2-ம் தேதி நடைபெறும் அரசு பணியாளர் சங்க அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு மற்றும் நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் பங்கேற்பார்கள் என அரசு பணியாளர் மகா சம்மேளன அகில இந்திய பொதுச்செயலாளர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2015, 1:36 pm

ஜி.சுந்தரராஜன்

தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மக்கள் நலன் கருதி வருகிற செப்.2-ம் தேதி நடைபெறும் அரசு பணியாளர் சங்க அகில இந்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு மற்றும் நியாயவிலைக்கடை பணியாளர் சங்கத்தினர் பங்கேற்பார்கள் என அரசு பணியாளர் மகா சம்மேளன அகில இந்திய பொதுச்செயலாளர் கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களிடையே தெரிவித்தது:

கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு கோடிக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு போராடி பெற்ற தொழிலாளர் நல சட்டங்களினால் கிடைத்த சலுகைகளை பறிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. நிரந்திர தொழிலாளர்களை குறித்து, பயிற்சியாளர்கள் என தொழிலாளர்களை நியமனம் செய்து தொழிலாளர்கள் நலனை சுரண்டி வருகிறது. புதிய சட்டங்கள் தொழில்துறைக்கு நலம் பயக்கவில்லை. ஒட்டு மொத்த தொழிலாளர்கள், பணியாளர்கள் நலன் பறிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

விவசாயிகளின் நிலங்களை அபகரிக்க மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. கடந்த அரசு 80 சதவீத விவசாயிகள் ஆதரவு பெற்றால்தான் நிலத்தை கைகயகப்படுத்தபடலாம் என இருந்தது. தற்போது இந்த அரசு விவசாயிகள் ஒப்புதல் இல்லாமலேயே நிலத்தை கைகயகப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது. விவசாயிகள் தற்கொலை அதிகளவில் நடைபெற்று வரும் நமது நாட்டில் நிலம் கையக்கபடுத்தும் சட்டம் வெந்த புன்னில் வேல் பாச்சுவது போலாகும். அரசு பணியாளர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு எதையும் பரிசீலிக்கவில்லை. 2012,13,14 ஆண்டுகளில் போக்குவரத்து துறை, வருவாய்த்துறையில் ரூ.8 ஆயிரம் ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது அதே பணியை தனியார் ஏஜென்சி (வெளி ஆதாரம் மூலம்) மூலம் ரூ.50 ஆயிரம் பெற்றுக்கொண்டு, ரூ.4 ஆயிரம் ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்படுகிறது. 15 மாவட்டங்களில் வருவாய்த்துறையில் 6 ஆண்டுகளாக பணியாற்றிய கணினி பணியாளர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பொதுவிநியோக திட்டம் நூறு சதவீத கணினி மயமாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு சிவில் சப்ளை கார்பரேஷன் ஊழியர்களுக்கு இணையான ஊதியத்தை கூட்டுறவுத்துறை நியாயவிலைக்கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். பொதுவிநியோக திட்டத்தின் உணவு மாணிவயத்தை ரொக்கமாக வழங்கக்கூடாது. புதுச்சேரி, புதுதில்லி உள்ளிட்ட 3 மாநிலங்களில் ரொக்கமாக வழங்க உத்தரவிடப்பட்டதற்கு மத்தியஅரசை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழகத்தில் உணவு மானியத்தொகை ரொக்கமாக வழங்க உத்தரவிட்டால் கடுமையான போராட்டத்தை நடத்துவோம். பொதுவிநியோகத்திட்டத்தை தனித்துறையாக அறிவிக்க வேண்டும் என அவசர செயற்குழுகூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என கு.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

முன்னதாக சிதம்பரம் ஹோட்டல் அக்சயாவில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில அவசர செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜி.ராஜேந்திரன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஜி.ஜெயச்சந்திரராஜா வரவேற்றார். அரசு பணியாளர் மகாசம்மேளன அகில இந்திய பொதுச்செயலாளர் கு.பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். நியாயவிலைக்கடை பணியாளர் சங்க துணைத் தலைவர் டி.செல்லத்துரை, அரசு பணியாளர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் கே.அறவாழி, துணைத் தலைவர் ஜி.சீனுவாசன் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.