பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

சிதம்பரம் அருகே கல்லை தூக்கி போட்டு அண்ணன் கொலை: தம்பி கைது

சிதம்பரம் அருகே அண்ணன் மீது கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த தம்பியை போலீஸôர் கைது செய்தனர்.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2015, 11:57 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே அண்ணன் மீது கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்த தம்பியை போலீஸôர் கைது செய்தனர்.

சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் புதுகாலனியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் மகன் ராஜதுரை (22). இவர் கடந்த பிப்ரவரி மாதம் சிதம்பரம் அருகே உள்ள மேலகுண்டபலபாடி கிராமத்தைச் சேர்ந்த ராஜதுரை மகள் வித்யாவை (17) காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது ராஜதுரையின் தம்பி வினோத்திற்கு பிடிக்கவில்லை.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை ராஜதுரை தனது தந்தை பன்னீர்செல்வத்திடம் வெளிநாடு செல்வதற்காக பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். இதனையறிந்த தம்பி வினோத், அண்ணன் ராஜதுரையிடம் ஏன் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்கிறார் என கேட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ராஜதுரை வீட்டின் எதிரே உள்ள வயல் வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்த தம்பி வினோத் கீழே கிடந்த பெரிய கல்லை எடுத்து அண்ணன் ராஜதுரை தலை மீது போட்டுள்ளார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராஜதுரை சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இறந்தார். இதுகுறித்து ராஜதுரையின் மனைவி வித்யா கொடுத்த புகாரின் பேரில் கிள்ளை போலீஸôர் வழக்குப் பதிவு செய்து தம்பி வினோத்தை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.