டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

விழுப்புரத்தில் வன்முறை: வைகோ, ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம்

விழுப்புரம் சேஷ சமுத்திரம் கிராமத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 6:28 am

அரவிந்தன்

விழுப்புரம் சேஷ சமுத்திரம் கிராமத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைகோ: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சேஷ சமுத்திரம் கிராமத்தில் ஒரு தெருவின் வழியே கோயில் தேரைக் கொண்டு செல்வது தொடர்பாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதோடு, மிகுந்த கவலை தருகிறது.

 அமைதியை நிலைநாட்ட முயன்ற காவல்துறை கண்காணிப்பாளர் உள்பட சிலரும் தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.தற்போது, அந்தப் பகுதியில் மிகுந்த பதற்றம் நிலவுகிறது. வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து, காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 இந்தச் சம்பவத்தில் ஈடுபடாத அப்பாவி பொதுமக்களுக்கு காவல்துறையினர் எந்த இடையூறும் செய்துவிடக் கூடாது. இதுபோன்ற வன்முறையால் ஒட்டுமொத்த சமுதாயத்தின் நலனும் மிகவும் பாதிக்கப்படும் என்பதால், வெறுப்புக்கு இடம் கொடுக்காமல் நல்லிணக்கமாக இரு தரப்பினரும் வாழ்ந்திட வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன்: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்திலுள்ள சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் தேரோட்டத்தையொட்டி நடைபெற்ற வன்முறை சம்பவத்தை மார்க்சிஸ்ட் வன்மையாகக் கண்டிக்கிறது. சேஷசமுத்திரம் பகுதியில்  தற்போதுள்ள பதட்டமான நிலைமையை  தணிக்கவும், அங்குள்ள தலித் மக்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்திடவும் மாநில அரசு  நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.