போலியாக 126 மாணவர்கள்: ஒத்துழைக்காத தலைமை ஆசிரியைக்கு மிரட்டல்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் போலியாக 126 மாணவர்களை வருகையில் காட்டி, கூடுதலாக 6 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருவதாகவும், இந்தத் தவறைச் செய்ய மறுத்த தலைமை ஆசிரியையிடம் ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மிரட்டுவதால், தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்றும், மிகுந்த மன உளச்சலில் உள்ள தான் தற்கொலை செய்து கொண்டால் அதற்கு பள்ளி நிர்வாகமும், சக ஆசிரியர்களும்தான் காரணம் என்று தமிழக முதல்வருக்கு அவர் சனிக்கிழமை அனுப்பியுள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார்.







