லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

விருதுநகர் அருகே ஸ்ரீஷீரடி சாய்பாபா திருக்கோயிலில் 6-ம் ஆண்டு வருடாபிஷேக விழா

விருதுநகர் அருகே ஸ்ரீஷீரடி சாய்பாபா திருக்கோயிலில் 6-ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு கோபுர குடமுழுக்கு மற்றும் ஸ்ரீஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் நிகழ்ச்சி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஆகஸ்ட் 2015, 2:23 pm

விருதுநகர் அருகே ஸ்ரீஷீரடி சாய்பாபா திருக்கோயிலில் 6-ம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு கோபுர குடமுழுக்கு மற்றும் ஸ்ரீஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம் நிகழ்ச்சி ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவை முன்னிட்டு அதிகாலையில் விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து கேரள செண்டை மேளத்துடன் யானை பல்லாக்குடன் பெண்கள் பால்குடம் ஊர்வல நிகழ்ச்சியும் நடைபெற்றது. சாய்பாபா திருக்கோயில் வளாகத்தில் கணபதி பூஜை, லெஷ்மிபூஜை, மஹா விஷ்ணு, ஸ்ரீஷீரடி சாய்பாபா ஹோமங்கள், வேதபூஜை, 108 சங்கு பூஜை, கலசபூஜை, வேதபாராயணம், விஷ்ணுசகஸ்ரநாமபாராயணம் ஆகிய முதல் கால ஹோமங்கள் நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து 10.35 மணிக்கு கோபுர குடமுழுக்கும், ஸ்ரீஷீரடி சாய்பாபாவுக்கு  சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது.

இந்த வருடாபிஷேக விழாவை முன்னிட்டு செங்கமல்நாச்சியார்புரம் ஸ்ரீகிருஷ்ண கான சபா பக்தியுடன் வழங்கிய சாய் பஜன் வழிபாட்டு பாடல் நிகழ்ச்சியும், திருக்கோயில் வளாகத்தில் சொற்பொழிவும் நடைபெற்றது.

இத்திருக்கோயிலில் பக்தர்கள் வழிபாடு செய்தால் தீராத பிரச்னைகள் தீரும் என்பது ஐதீகம் ஆகும். அதனால், இவ்விழாவில் விருதுநகர், சூலக்கரை, கட்டையாபுரம்,  குரமாலிரங்காபுரம், மீசலூர், அழகாபுரி, செவல்பட்டி, கருப்பம்பட்டி, சீனியாபுரம், வள்ளியூர், ஆமத்தூர், எல்கைபட்டி, கூரைக்குண்டு, சங்கராலிங்காபுரம், செங்குன்றாபுரம், குந்தலப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் இருபாலரும் திரளாக கலந்து கொண்டு ஷீரடி சாய்பாபாவின் தரிசனம் பெற்றனர். இவ்விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் திருக்கோயிலின் சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது. அதேபோல், பெண் பக்தர்களுக்கு பூ, பழம், குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்களும் அளிக்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஷீரடி சாய்பாபா மந்திர் குழுமத்தின் நிர்வாகி ராகவநாயுடு மற்றும் வெங்கடேஸ்வரா மிஷன் நிர்வாகிகள் ஆகியோர் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.