ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள் வருவாய் தலை ஒட்டுவதில் இருந்து விலக்கு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள் வருவாய் தலை (ரெவின்யூ ஸ்டாம்ப்) ஒட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :31 ஆகஸ்ட் 2015, 5:39 am

முத்துகுமார்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள் வருவாய் தலை (ரெவின்யூ ஸ்டாம்ப்) ஒட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருநெல்வேலி தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலக மண்டல ஆணையர் (பொ) கே.ஷேக்சிந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் பணப் பட்டுவாடா படிவங்களுக்கு வருவாய் தலை ஒட்டுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு) பண்டாரு தத்தாத்ரேயா அறிவித்துள்ளார். மேலும், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் க்ளைம் செட்டில்மென்டை மேலும் எளிதாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதுதவிர சந்தாதாரர்கள் தங்களது கேஒய்சி விவரங்களுடன் ஆதார் எண் மற்றும் ஒருங்கிணைந்த கணக்கு எண் செயலாக்கம் செய்யும் பட்சத்தில் கணக்கு முடிக்கும் படிவங்களில் தொழிலதிபர்களின் கையொப்பம் பெறுவதில் இருந்தும் விலக்கு அளிக்க முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் ஒரு தொழிலாளி வருங்கால வைப்புநிதியில் பணப் பரிமாற்றங்களின்போது தொழிலதிபரை சாந்திருப்பது குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேஒய்சி விவரங்களால் தொழிலாளியின் அடையாளம் உறுதிப்படுத்தப்படுவதால் தொழிலதிபரை சார்ந்திருப்பது படிப்படியாகக் குறைந்து தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தின் சேவைகளை வேகமாகவும் எளிதாகவும் பெற வாய்ப்பு ஏற்படும் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.