பண்ருட்டி வட்டாச்சியர் அலுவகம் முற்றுகை
பண்ருட்டி வட்டாச்சியர் அலுவலகத்தை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.


பண்ருட்டி வட்டாச்சியர் அலுவலகத்தை நூற்றுக்கணக்கானோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதாவது அண்மையில் பெய்து கனமழையின் போது வீடு சேதமடைந்தவர்களுக்கு கணக்கீடு செய்து நிவாரணம் வழங்கும் பணியில் வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
சேர்செரியான் குப்பம் கிராமத்தில் வீடுகளை இழந்த 290 பேருக்கு தலா ரூ.4,100 வீதம் ரூ.12 லட்சம் நிவாரணமாக வருவாய் துறையினர் வழங்கினர். இத்தகவலை அறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த
400-க்கு மேற்பட்டோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நிவாரணம் கோரி பண்ருட்டி வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களுடன் வட்டாச்சியர் ஆர்.கீதா பண்ருட்டி காவல்துறை கண்காணிப்பாளர் இளங்கோவன் மற்றும் பண்ருட்டி காடாம்புலியூர் ஆய்வாளர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இச்சமரசத்தை ஏற்க
மறுத்த மக்கள் தங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...