மழை, வெள்ளத்தால் பாதிப்பக்கட்ட இடங்களில் வட்டாச்சியர் ஆய்வு
பண்ருட்டியில் மழை வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தாங்க வைக்கப்பட்டுள்ளனர்.


பண்ருட்டியில் மழை வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தாங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2 நாட்களாகப் பெய்து வரும் கனமழையால் பண்ருட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் தாழ்வான பகுதியில் நீர் தேங்கியுள்ளது. நெல்லிக்குப்பம் அருகேயுள்ள மெய்டபாக்கம், திருகண்டேஸ்வரம், எல்லான்புரம், அங்குச்செட்டிபாளையம், புலவன்குப்பம், பண்ருட்டி நகரப்பகுதியில் சாமியார் தர்கா, களத்துமேடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், திருமண மண்டபங்கள் ஆகியவற்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குத் தேவையான உணவு குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் எஸ்.மாதவன், கேபிள் டிவி வட்டாச்சியர் வி.ரவிக்குமார், பண்ருட்டி வட்டாச்சியர் ஆர்.கீதா மற்றும் வருவாய் துறையினர் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...