தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

நீர்நிலைகளையும், மக்களையும் பாதுகாக்க அரசு முறையாக திட்டமிட வேண்டும்: ராமதாஸ்

கடலூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாமக தலைவர் ராமதாஸ் பார்வையிட்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து வருகின்றார்.

News image
Updated On :10 டிசம்பர் 2015, 6:59 am

சீனிவாசன்

கடலூரில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாமக தலைவர் ராமதாஸ் பார்வையிட்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்து வருகின்றார்.

அப்போது அவர், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 

பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட நகரம் மற்றும் கிராம பகுதிக்கு நேரடியாகச் சென்று தங்களால் முடிந்த சிசிக்சை உதவிகளை அளிக்க வேண்டும். நோய் பரவாமல் தடுக்க அரசு பாதுகாப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும். பொதுமக்கள் தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். மழை நீர் வடியும் தருவாயில் காலரா, டைபாய்டு, வயிற்றுப்போக்கு, கொசுத் தொல்லையால் டெங்கு, ‘மலேரியா, உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி போட்டால் பெரியர்வர்களும் சேர்ந்து போட்டுக்கொள்ள வேண்டும். நிவாரணப் பொருட்கள் வழியில் கொள்ளையடிக்கப்படுகிறது. மலிவான மட்டரகமான அரசியல் இதைக் கண்டிக்கின்றோம். இந்த நடவடிக்கையைச் சரிசெய்து கொள்ளவேண்டும். வெளியில் இருந்து வரும் நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையாகச் சென்று சேர வேண்டும்.

அதிகாரிகள் நிவாரணப் பொருட்களை பெற்று முதல்வரின் படத்துடன் அரசு வழங்குவதாக வழங்க ஏற்பாடு செய்து வருகின்றனர். மேலும், நீர்நிலை ஆக்கிரமிப்பு நடைபெற்று வருகின்றது. நீர்நிலைகளையும், மக்களையும் பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.