தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தாம்பரத்தில் விதியை மீறி கட்டிய மண்டபத்தை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

தாம்பரத்தில் விதியை மீறி கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை உடனே இடிப்பதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :11 டிசம்பர் 2015, 4:26 pm

சென்னை தாம்பரத்தில் விதியை மீறி கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை உடனே இடிப்பதற்கு சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமும், தாம்பரம் நகராட்சியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தாம்பரத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள திருமண மண்டபத்தை இடிப்பதற்கு தாம்பரம் நகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்து மண்டபத்தின் உரிமையாளர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

விசாரணையின் போது விதியை மீற கட்டப்பட்டுள்ள மண்டபத்தை தனது சொந்த செலவில் ஜனவரி 2015க்குள் இடித்து விடுவதாக உரிமையாளர் வாக்களித்தார். எனினும் அவர் கட்டடத்தை இடிக்காமல், அங்கு வாடகைக்கு இருக்கும் கடைக்காரர் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அது தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர்கள் மனு அளித்தனர்.

மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், வாடகைதாரர்கள் மீதான கோரிக்கையை பரிசீலிக்க சி.எம்.டி.ஏ.வுக்கு உத்தரவிட்டது. எனினும், அக்கட்டடத்தில் அனுமதிக்கப்பட்ட 5 கடைகளுக்குப் பதிலாக 19 கடைகள் கட்டப்பட்டிருந்ததால், சி.எம்.டி.ஏ. அவர்கள் கோரிக்கையை நிராகரித்து.

இந்நிலையில் இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கே.கே.சசிதரன் மற்றும் பி.தேவதாஸ் ஆகியோர், இந்த உத்தரவு கிடைக்க பெற்ற 3 நாள்களுக்குள் திருமண மண்டபத்தை இடிப்பதற்கு உத்தரவிட்டனர்.

சி.எம்.டி.ஏ.வும், தாம்பரம் நகராட்சியும் இதை கண்காணித்து ஜனவரி 5 ஆம் தேதிக்குள் நீதிமன்றத்துக்கு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.