பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கடலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் தற்செயல் விடுப்பெடுத்து போராட்டம்

கடலூர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 9-ம் தேதி முதல் பலத்த மழை பெய்தது. பின்னர் ஒரு வாரம் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு...

News image
Updated On :17 டிசம்பர் 2015, 6:47 am

சீனிவாசன்

கடலூர் மாவட்டத்தில் நவம்பர் மாதம் 9-ம் தேதி முதல் பலத்த மழை பெய்தது. பின்னர் ஒரு வாரம் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள் சேதடைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், கணக்கெடுக்கச் செல்லும் இடத்தில் பொதுமக்களும், அதிகாரிகளும் தரக்குறைவாக பேசுகின்றனராம். இதனைக் கண்டிக்கும் வகையில் பண்ருட்டி குறிஞ்சிபாடி வட்டத்தில் உள்ள சுமார் 100-க்கு மேற்பட்ட கிராம நிர்வாக அலுவர்கள் இன்று ஒருநாள் தற்செயல் விடுப்பெடுத்து கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மேலும் மாலை அந்தந்த வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கண்ட ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளதாகக் கிராம நிர்வாக அலுவலக சங்கத்தின் பண்ருட்டி வட்டச் செயலர் சிவலிங்கம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.