ஆரணி அடுத்த நெசல் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு திங்கள்கிழமை பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.
ஆரணி அடுத்த நெசல் கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ஹரீஷ் என்பவர் பள்ளியில் பயிலும் மாணவிகளிடம் பல்வேறு சில்மிஷங்களை செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து சில மாணவிகள் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக பள்ளியில் அண்மையில் நடைபெற்ற பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டம் நடைபெற்றதில் பெற்றோர்கள் அனைவரும் ஆசிரியர் ஹரீஷ் குறித்து தலைமையாசிரியை நந்தினியிடம் புகார் கூறினர். மேலும் ஆசிரியர் ஹரீஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். பள்ளி தலைமையாசிரியரும் கண்டிப்பாக மேலதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.
பின்னர் வழக்கம்போல் திங்கள்கிழமை பள்ளி தொடங்கியபோது ஆசிரியர் ஹரீஷ் பள்ளிக்கு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு பள்ளிக்கு செனறு முற்றுகை செய்தனர். மேலும் ஆசிரியர் ஹரீஷை பள்ளியை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுச்சேரியில் வரலாறு காணாத வாக்குப்பதிவு! சிறப்புத் தீவிர திருத்தப் பணி காரணமா?

லக்னௌவுக்கு 182 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

என்னைப் புதைத்தாலும் எனது திட்டங்களைப் புதைக்க முடியாது! - இபிஎஸ்-க்கு ஸ்டாலின் பதில்!

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

