எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

141 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரியாறு அணை நீர்மட்டம்

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தொடர்ந்து 19 நாட்களாக 141 அடிக்கும் மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :24 டிசம்பர் 2015, 10:38 am

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் கடந்த டிசம்பர் 5-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை தொடர்ந்து 19 நாட்களாக 141 அடிக்கும் மேல் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

பெரியாறு அணை நீர்பிடிப்பு மற்றும் தேக்கடியில் பெய்த மழையால் முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் கடந்த டிசம்பர் 5-ம்  தேதி 141.10 அடிக்கு உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், கடந்த டிச.8-ம் தேதி அணை நீர்மட்டம் 141.70 அடியாக உயர்ந்தது. அணை நீர்மட்டம் 142 அடியை எட்டிய நிலையில், அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து உபரிநீர் மதகுகள் வழியாக கேரளப் பகுதியில் திறக்கப்பட்டது.

பெரியாறு அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளதால், அணை நீர்மட்டம் கடந்த 19 நாட்களாக 141 அடிக்கும் மேல் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த டிச.8-ம் தேதி முதல் தற்போது வரை அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் தொடர்ந்து 141 அடியாக நிலை நிறுத்தப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்

பெரியாறு அணை நிலவரம்: பெரியாறு அணை நீர்மட்டம் புதன்கிழமை 141.30 அடியாக இருந்தது. அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 1,712 கன அடி. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 2,100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் தண்ணீர் இருப்பு 7,477 மில்லியன் கன அடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.