இதனால் இப்பகுதியில் ஏராளமான ஜின்னிங் மில்கள் இயங்கி வந்தது. தண்ணீர் குறைவான கரிசல் நிலங்களில் இந்த பருத்தி நன்றாக விளைந்த நிலையில், சமீப காலமாக இப்பகுதிகளில் மக்காச்சோளம், வெள்ளைச்சோளம் ஆகியன பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் பருத்தி சாகுபடியை விவசாயிகள் துவங்கியுள்ளனர். பொதுவாக, அதிகமாக தண்ணீர் நின்றால் சோளம், பருத்தி போன்றவை சாகுபடி குறையும், ஆனால் பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் ராஜீவ் நகர் என்ற இடத்தில் பழனி அடிவாரம் பகுதியை சேர்ந்த மணி என்பவர் சுமார் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் பருத்தி செடிகளை பயிரிட்டு நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளார்.