பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

கூடலூர் அருகே காட்டு பன்றி தாக்கி 2 விவசாயிகள் படுகாயம்

கூடலூர் அருகே காட்டு பன்றி தாக்கி இரண்டு விவசாயிகள் படுகாயமடைந்து தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News image
Updated On :10 ஜூலை 2015, 4:16 pm

அறிவழகன்

கூடலூர் அருகே காட்டு பன்றி தாக்கி இரண்டு விவசாயிகள் படுகாயமடைந்து தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே கழுதைமேட்டு புலம் பகுதியில் விவசாயிகள் மானவரி விவாசயமான எள், கடலை, மொச்சை உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர். இந்த பகுதி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் உள்ளதால், வனப்பகுதியிலிருந்து உணவு மற்றும் தண்ணீருக்காக வெளியேறும் வனவிலங்குகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகின்றது. இப்பகுதி விவசாயிகள் வனவிலங்குகளிடமிருந்து பல்வேறு வழிகளில் விவசாய பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.

    இந்நிலையில், சனிக்கிழமை  கழுதைமேட்டுபுலம், 18-ம் கால்வாய் அருகே மானாவாரி விவசாய நிலத்தில் விவசாயப்பணியில் ஈடுபட்டிருந்த கூடலூரைச் சேர்ந்த விவசாயி சின்னராஜ்(60), ரகீம்(40) ஆகியோரை திடீரென வனப்பகுதியிலிருந்து வந்த காட்டு பன்றி தாக்கியதில் இரண்டு விவசாயிகளும் பலத்த காயம் அடைந்தனர். இவர்களை கம்பம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மேல்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இது குறித்து தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.