சிறு, குறு விவசாயிகள் நஷ்டமடைவதைதடுக்க பயிர் காப்பீடு திட்டம் 

சிறு, குறு விவசாயிகள் நஷ்டம் அடைவதை தடுக்கும் வகையில் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 20 வகையான பயிர்களுக்கு குறிப்பிட்டுள்ள நாள்களுக்குள் பிரிமிய தொகை செலுத்தி பயன்பெறலாம்.
Updated on
1 min read

சிறு, குறு விவசாயிகள் நஷ்டம் அடைவதை தடுக்கும் வகையில் தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 20 வகையான பயிர்களுக்கு குறிப்பிட்டுள்ள நாள்களுக்குள் பிரிமிய தொகை செலுத்தி பயன்பெறலாம்.

இது தொடர்பாக தேசிய வேளாண் பயிர் காப்பீடு நிறுவனத்தின் மண்டல மேலாளர் வ.பாரதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் நிகழாண்டில் காரீபருவத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் தேசிய வேளாண் காப்பீட்டு திட்டம் மூலம் நிகழாண்டில் 20 பயிர்களுக்கு செயல்படுத்தப்படுகிறது.

 காரீ பருவத்தில் நெல் குறுவை சாகுபடி செய்துள்ள சிறு, குறு விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு ரூ.228, கம்பு-ரூ.32, சோளம்-ரூ.38, ராகி-ரூ.124, மக்காச்சோளம்-ரூ.157, துவரை-ரூ.127, உளுந்து-ரூ.62, பச்சைபயறு-ரூ.51, நிலக்கடலை-ரூ.388, எள்ளு-ரூ.93, சூரியகாந்தி-ரூ.270, பருத்தி-ரூ.253, வெங்காயம்-ரூ.2614, மஞ்சள்-ரூ.6877, வாழை-10876, மரவள்ளிக் கிழங்கு-ரூ.1702, உருளை-4514, அண்ணாசிபழம்-ரூ.4776, கரும்பு-ரூ.1876 செலுத்த வேண்டும். பயிர்க்கடன் பெறா விவசாயிகள் பிரிமியத்தை செலுத்த சிட்டா அடங்கல் அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் பெறப்பட்டு முன்மொழிவு படிவத்துடன் அவரவர் சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியில் செலுத்த வேண்டும். மேலும், முன்மொழிவு படிவங்களை அருகில் உள்ள வேளாண்மை துறை, கூட்டுறவு வங்கி மற்றும் தேசிய வங்கியிலோ பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் வட்டார பகுதி கிராமங்களில் அறுவடை சோதனைகள் நடத்தப்படும். அதன் அடிப்படையில் நிகழாண்டு பருவத்தில் சராசரி மகசூலை, கடந்த 3 அல்லது 5 ஆண்டுகால உத்திரவாத மகசூலோடு ஒப்பிடும் போது நடப்பு பருவத்தின் மகசூல் எவ்வளவு குறைந்திருக்கிறதோ அந்த விகித அடிப்படையில் கணக்கிட்டு காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும்.   

இத்திட்டத்தில் நெல் பயிருக்கு காப்பீடு திட்டத்தில் கடன் பெறாத விவசாயிகள் சேருவதற்கான கடைசி நாள் வருகிற 31.7.2015 ஆகும். கம்பு, சோளம், ராகி, மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைபயறு, நிலக்கடலை, எள்ளு, சூரியகாந்தி, பருத்தி, உருளை, வெங்காயம், அன்னாசிபழம், மஞ்சள், வாழை மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆகிய பயிருக்கு வருகிற 15.9.2015 காப்பீடு செய்து கொள்ளலாம்.

 இக்கூடுதல் மதிப்பீட்டில் பிரிமியத் தொகையினை பயிர் கடன் பெறா விவசாயிகள் அவரவர் விருப்பத்தின் பேரில் செலுத்தலாம். அதனால், தங்கள் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள வட்டாரப் பகுதியில், எந்தெந்த பயிர்களுக்கு காப்பீடு உள்ளது என்பதை வேளாண்மைத்துறை அலுவலர்கள் மூலம் அறிந்து கொள்ள வேண்டும். அதையடுத்து ஒவ்வொரு பயிருக்கும் நி்ர்ணயம் செய்த பிரிமியத் தொகையை  விவசாயிகள் செலுத்தி பயனடைய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com