தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியின் போது உயிரிழந்த 5 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:
அரியலூர் கீழபெரம்பலூரில் மின்வாரிய மஸ்தூரான ராஜவேல், தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் மின் கம்பியாளரான அனுமந்தன், வேப்பிலைப்பட்டி பிரிவில் களஉதவியாளர் முருகேன், வேலூர் மாவட்டம் காட்பாடி பிரிவில் களப்பணியாளரான அசோகன், பனப்பாக்கம் பிரிவில் கள உதவியாளரான வேலாயுதம் ஆகியோர் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
இந்த துயரச் சம்பவங்களில் மரணம் அடைந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களது குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.3 லட்சம் நிவாரண நிதி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









