இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

எந்த கேள்விக்கும் 'இல்லை' என்ற பதிலை விரும்பாத கலாம்

எந்த ஒரு கேள்விக்கும் இல்லை என்ற பதிலை மட்டும் கூறக்கூடாது என்பதில் கலாம் தெளிவாக இருந்தார். அதனால்தானோ என்னவோ அவர் விஞ்ஞானத்தை தேர்வு செய்தார்.

News image
Updated On :15 அக்டோபர் 2021, 6:02 am

எந்த ஒரு கேள்விக்கும் இல்லை என்ற பதிலை மட்டும் கூறக்கூடாது என்பதில் கலாம் தெளிவாக இருந்தார். அதனால்தானோ என்னவோ அவர் விஞ்ஞானத்தை தேர்வு செய்தார்.

ஒரு முறை மூளை வளர்ச்சியில்லாத குழந்தைகளுக்கு உதவும் வகையில் ஒரு கருவியைக் கண்டுபிடிப்பது பற்றி பேச்சு எழுந்தது.

அப்போது, உடன் இருந்த அண்ணா பல்கலையின் பிஎச்டி மாணவர் ஏ.கே. ஜார்ஜிடம், அப்துல் கலாம் கூறியது என்ன தெரியுமா? இந்த விஷயத்தை கையில் எடுத்துக் கொண்டு இதை நோக்கி உனது ஆராய்ச்சியை தொடர வேண்டும் என்றார். ஒரு கேள்விக்கு எந்த பதிலையும் கொடு, ஆனால் இல்லை என்ற பதிலை மட்டும் சொல்லாதே என்றார்.

இது குறித்து அவர் கூறியதை ஜார்ஜே நினைவு கூருகிறார்.

அதாவது, 1870ம் ஆண்டு பிரிட்டீஷ் விஞ்ஞானிகள் காற்றை விட சற்று எடை கூடுதலாக உள்ள எந்த ஒரு பொருளும் காற்றில் பறக்காது என்று பதிவு செய்ததை எடுத்துக் காட்டினார். ஆனால், அடுத்த சில ஆண்டுகளில் ரைட் சகோதரர்கள் முதல் விமானத்தை பறக்கவைத்து சாதனை படைத்தனர் என்பதை பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.