விவசாயிகள் தரமான பருத்தி விதைகளை உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் இருந்து வாங்கி பயன்படுத்த வேண்டும் என விதை ஆய்வுத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இது குறித்து விதை ஆய்வு துணை இயக்குநர் கிருஷ்ணகுமாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விருதுநகர் மாவட்ட விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பருத்தி சாகுபடி செய்வதற்கு தரமான விதைகளையே வாங்கி பயன்படுத்த வேண்டும். இதை தவிர்த்து மளிகை கடையிலோ அல்லது வீட்டிற்கு கொண்டு வரும் விதைகளையோ எக்காரணம் கொண்டும் வாங்கி பயன்படுத்த வேண்டாம்.
எனவே இதை தவிர்க்கும் வகையில் விதை விற்பனை நிலையங்களுக்கு சென்று விற்பனை பட்டியலை கேட்டு பெற வேண்டும். அதில், விதை குவியல் எண், காலவதிநாள், விதை உரிம எண், விதை உற்பத்தி மைய விவரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதை பார்த்து வாங்க வேண்டும். அதேபோல், விதை பையில் பொறுத்தப்பட்டுள்ள அட்டையில் காலவதி நாள், எந்த பருவத்திற்கு ஏற்றது என்கிற விவரங்களையும் சார்பார்த்து வாங்குவதுதான் நல்லது. குறிப்பாக மூடையில் வைத்து விற்பனை செய்யும் விதைகளை வாங்கக் கூடாது. எனவே போலி விதைகளை யாரவது விற்பனை செய்வதை அறிந்தால் உடனடியாக விதை ஆய்வு மைய துணை இயக்குநர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்

திருச்செந்தூர், சீரடியைத் தொடர்ந்து வேளாங்கண்ணி, நாகூர் தர்கா செல்லும் விஜய்?!
விஜய்யுடன் சீரடி கோவிலுக்குச் சென்ற 2 பெண்கள் யார்?

நாட்டில் முதல்முறையாக ஏஐ அடிப்படையிலான பன்மொழி சேவைகள்: பெங்களூரு காவல்துறை அறிமுகம்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

