ஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணி15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பாஜக-விலேயே தொடருகிறேன்: அப்துல் கலாம் பேரன்

பாரதீய ஜனதா கட்சியிலிருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில், கட்சியிலே தொடருவதாக மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் பேரன் ஷேக் சலீம் கூறியுள்ளார்.

News image
Updated On :24 நவம்பர் 2015, 12:49 pm

பாரதீய ஜனதா கட்சியிலிருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில், கட்சியிலே தொடருவதாக மறைந்த குடியரசு தலைவர் அப்துல் கலாம் பேரன் ஷேக் சலீம் கூறியுள்ளார்.

கலாமின் மறைவுக்கு பின்னர் அவரது பேரன் ஷேக் சலீம் கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார்.

இந்நிலையில் அவர் கட்சியிலிருந்து விலகியதாக நேற்று ஊடகங்களில் செய்தி பரவியது. இந்நிலையில் இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சலீம், தான் பாரதீய ஜனதா கட்சியிலேயே தொடர்வதாகவும், கட்சிக்காக உண்மையாக உழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கட்சியின் தலைவர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடிக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2012 ஆம் ஆண்டு பாரதீய ஜனதா கட்சியில் இணைந்த, அப்துல் கலாமின் உறவினரான செய்யது காஜா இப்ராஹிம், நேற்று கட்சியிலிருந்து விலகினார். தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு துணைத் தலைவராக காஜா இப்ராஹிம் பதவி வகித்து வந்தார்.

தில்லியில் அப்துல்கலாம் வசித்து வந்த வீட்டை, அவரது நினைவாக அறிவு மையமாக மாற்றம் செய்ய வேண்டும் என இப்ராஹிம் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில் அந்த  வீடு அமைச்சர் மகேஷ் சர்மாவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை கண்டித்தே காஜா இப்ராஹீம் தனது பதவியை நேற்று ராஜிநாமா செய்தார்.

காஜாவின் ராஜிநாமா செய்துள்ள நிலையில் சலீம் ராஜிநாமா செய்ததாக ஊடகங்களில் செய்திகள் பரவின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.