தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பட்டுக்கோட்டையில் ரெளடி வெட்டிக் கொலை

முன் விரோதம் காரணமாக பட்டுக்கோட்டையில் திங்கள்கிழமை காலை மர்ம நபர்களால் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

News image
Updated On :30 நவம்பர் 2015, 11:41 am

பார்திபன்

முன் விரோதம் காரணமாக பட்டுக்கோட்டையில் திங்கள்கிழமை காலை மர்ம நபர்களால் ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

பட்டுக்கோட்டை இந்திரா நகரைச் சேர்ந்த ரெளடி செல் என்கிற என். செல்லத்துரை (39). இவருக்கு மனைவி மகேஸ்வரி (32), மகள் முத்தமிழரசி (4), ஒன்றரை வயது மகன் பாலாஜி உள்ளனர்.

செல்லத்துரை மீது கொலை, கொலை முயற்சி உள்பட 10 வழக்குகள் நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளன. பட்டுக்கோட்டை நகர காவல் நிலையத்திலுள்ள ரெளடிகள் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை செல்லத்துரை தனது வீட்டருகே காசாங்குளம் தென்கரையிலுள்ள விநாயகர் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 2 இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத, அரைக்கால் டிராயர் அணிந்திருந்த 3 இளைஞர்கள் செல்லத்துரையை வழி மறித்து அவரை ஓட விடாமல் தடுத்து அரிவாளால் வெட்டினராம். மேலும் அவர் உடலில் பல இடங்களில் கத்தியால் குத்தி விட்டுத் தப்பினராம்.

இதில் பலத்த காயமடைந்த செல்லத்துரையை பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து செல்லத்துரை மனைவி மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில் பட்டுக்கோட்டை நகர காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.