கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் தேசிய கலை விழா: பெரம்பலூர் கல்லூரி முதலிடம்
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஸ்பார்க்ஸ் 15 என்ற தேசிய மூன்று நாள் கலை விழாவில், பெரம்பலூர் ஸ்ரீமதி ஆண்டவர் கலை மற்றும் அறிவியல்


விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் ஸ்பார்க்ஸ் 15 என்ற தேசிய மூன்று நாள் கலை விழாவில், பெரம்பலூர் ஸ்ரீமதி ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி முதலிடம் பெற்று கோப்பை மற்றும் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வென்றது.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த தேசிய கலை விழாவில், நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.
நிறைவு நாள் விழா வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. பல்கலைக்கழக இயக்குநர்கள் டாக்டர் எஸ்.சசிஆனந்த், எஸ்.அர்ஜூன் கலசலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வேந்தர் ச.சரவணசங்கர் வரவேற்றார். கலை விழா ஒருங்கிணைப்பாளரும், பதிவாளருமான டாக்டர் வெ.வாசுதேவன் வாழ்த்துரை வழங்கினார்.
மூன்று நாள் கலை விழாவில் காக்கா முட்டை பட நடிகை கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஸ், மாயா பட இயக்குநர் அஸ்வின் சரவணன், மாயா பட நடிகர் அம்ஜத்கான், சிரிப்பு நடிகர் சத்தீஷ், எழுத்தாளர் சென்னை ஆத்மார்தி, நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் நாடு முழுவதும் இருந்தும் 40-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 3 ஆயிரம் மாணவ மாணவியர் விழாவில் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 47 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
இதில் பெரம்பலூர், ஸ்ரீமதி ஆண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அணி வெற்றி பெற்று ரூ.1 லட்சத்திற்கான காசோலை மற்றும் கோப்பையை வென்றது. இரண்டாவது பரிசு கரூர் எம்.குமாரசாமி பொறியில் கல்லூரி அணி வென்று கோப்பையை பெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளாக மொத்தம் ரூ.3.50 லட்சம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...