கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

மாநில அளவிலான முதலாவது மாநில மெகா வாலிபால் போட்டி

தமிழ்நாடு மாநில கைப்பந்துக் கழகம் சார்பில் கல்லூரிகளுக்கிடையிலான முதலாவது மாநில மெகா வாலிபால் போட்டிகள், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைபெற்றது.

News image
Updated On :4 அக்டோபர் 2015, 2:45 pm

கோ.ஜெயக்குமார்

தமிழ்நாடு மாநில கைப்பந்துக் கழகம் சார்பில் கல்லூரிகளுக்கிடையிலான முதலாவது மாநில மெகா வாலிபால் போட்டிகள், விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைபெற்றது. இன்று மாலை நடைபெற்ற இறுதிப் போட்டியில் பெண்கள் பிரிவில் சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அணியும், ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணியும் முதலிடம் பெற்று தலா ரூ.25 ஆயிரம் பரிசு மற்றும் கோப்பைகளை வென்றன.

பரிசளிப்பு விழா, கலசலிங்கம் பல்கலைக்கழக விளையாட்டு அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.

தமிழ்நாடு கைப்பந்துக் கழக மாவட்டத் தலைவர் ஆர்.கே.துரைசிங் முன்னிலை வகித்ததார். தலைமையிட செயலாளர் டி.பொன்னியின் செல்வன் வரவேற்றார்.

இறுதிப் போட்டியில், மகளிர் பிரிவில் சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, சென்னை எத்திராஜ் கலை மற்றும் அறிவில் கல்லூரி அணியை 3-க்கு 0 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது. இவர்கள் எடுத்த புள்ளிகள் 25:11, 25:12, 25:14 ஆகும். முதலிடம் பெற்ற ஜேப்பியார் பொறியில் கல்லூரி அணிக்கு ரூ.25 ஆயிரம் பரிசு மற்றும் கல்விவள்ளல் தி.கலசலிங்கம் கோப்பையும், இரண்டாம் இடம் பெற்ற எத்திராஜ் கல்லூரி அணிக்கு ரூ.15 ஆயிரம் பரிசு மற்றும் உடற்கல்வி ஆசிரியர் தங்கவேல் கோப்பையும் வழங்கப்பட்டது.

சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணி, சென்னை பனிமலர் பொறியில் கல்லூரி அணியை 21:25, 26:24, 25:23 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

மூன்றாம் இடம் பெற்ற இந்துஸ்தான் பல்கலைக்கழக அணிக்கு ரூ.8 ஆயிரம் பரிசு மற்றும் டாக்டர் கலைச்செல்வி இளங்கோவன் கோப்பையும், நான்காம் இடம் பெற்ற பனிமலர் பொறியியல் கல்லூரி அணிக்கு ரூ.7 ஆயிரம் பரிசு மற்றும் ராமசுப்பிரமணியன் கோப்பையும் வழங்கப்பட்டது.

மாணவர் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி, சென்னை புனித ஜோசப் பொறியியல் கல்லூரி அணியை 25:17, 19:25, 23:25, 25:15, 15:10 என்ற புள்ளிக் கணக்கில் வென்று, ரூ.25 ஆயிரம் பரிசு மற்றும் சிவந்தி ஆதித்தனார் கோப்பையை வென்றது. இரண்டாம் இடம் பெற்ற புனித ஜோசப் பொறியல் கல்லூரி அணிக்கு ரூ.15 ஆயிரம் பரிசு மற்றும் டாக்டர் போஸ் கோப்பை கிடைத்தது.

பொள்ளாச்சி, எஸ்.டி.சி கல்லூரி அணி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணியை 25:20, 25:18 என்ற நேர் செட்டில் வென்றது. மூன்றாம் இடம் பெற்ற பொள்ளாச்சி எஸ்.டி.சி கல்லூரி அணிக்கு ரூ.8 ஆயிரம் பரிசு மற்றும் நடிகர் குமரன் கோப்பையும், நான்காம் இடம் பெற்ற திருச்சி ஜமால் முகமது கல்லூரி அணிக்கு ரூ.7 ஆயிரம் பரிசு மற்றும் வத்திராயிருப்பு பாண்டியன் கோப்பையும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் துணை வேந்தர் ச.சரவணசங்கர், பதிவாளர் வெ.வாசுதேவன், பல்கலைக்கழக இயக்குநர் எஸ்.சசிஆனந்த், தமிழ்நாடு மாநில வாலிபால் அசோஸியேன் துணைத் தலைவர் பி.பாலசந்தர், சினிமா நடிகர் குமரன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொதுச் செயலாளர் எம்.பி.செல்வகணேஷ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.